திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி பின் நடிப்பிலும் அதிகம் கவனம் செலுத்தி வெற்றி கண்டு வருகின்றனர். அதில் ஒருவராக தற்போது இறங்கி உள்ளவர்தான் இயக்குனர் செல்வராகவன்.
தமிழ் சினிமாவில் காதல் மற்றும் வித்தியாசமான திரைப்படங்களை எடுத்து வெற்றி கண்ட செல்வராகவனுக்கு என ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது அதை தாண்டி தற்போது நடிக்கும் தொடங்கி உள்ளதால் அவரைப் பின்பற்றும் ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
மேலும் நடிப்பிற்காக தன்னை முற்றிலும் மாற்றி கொண்டு நடக்கும் அளவிற்கு தற்போது உயர்ந்துள்ளதால் செல்வராகவனை கொண்டாட ஆரம்பித்துள்ளனர். இது ஒரு பக்கமிருக்க தனுசை வைத்து “நானே வருவேன்” என்ற திரைப்படத்தையும், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தையும் எடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் தொடர்ந்து நடிக்கும் படவாய்ப்புகளும் இவருக்கு கிடைத்த வண்ணமே இருகின்றன. அந்த வகையில் சாணி காயிதம் படத்தில் மிரட்டி வருகிறார். பீஸ்ட் படத்தில் கூட இவருக்கு வாய்ப்புகள் வந்தால் கூட வரலாம் என ஒருபக்கம் கூறப்படுகிறது.
சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் இவரும் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி ஏற்கனவே வெளியாகி வைரல் ஆன நிலையில் தற்போது இவர் அந்த திரைப்படத்திற்காக கொடூரமாக மாறி இருக்கும் புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
புகைப்படத்தை பார்த்தால் எதோ வில்லன் ரோலில் மிரட்ட ரெடியாக இருப்பது போல தெரியவருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..