லியோ படத்தின் முதல் பாதியை பார்த்து மெர்சலான சினிமா பிரபலம்.! வெளிவந்த முதல் விமர்சனம்

Leo
Leo

Leo Movie watch lalit kumar : ரசிகர்கள் நல்ல படங்களை எப்பொழுதுமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள் அந்த வகையில் அண்மையில் வெளியான ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருந்ததால் நல்ல வரவேற்பை பெற்று இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதுவரை மட்டுமே 610 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது. அதனைத் தொடர்ந்து வெளியான அட்லீயின் ஜவான் திரைப்படம் ஆக்சன் மற்றும் எமோஷனல் பேக் கலந்த திரைப்படமாக இருந்ததால் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது நான்கு நாட்களில் மட்டுமே 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது.

நிச்சயம் இந்த திரைப்படம் 1000 கோடிக்கு மேல் வசூல் அள்ளி ஒரு புதிய சாதனை படைக்கும் என பலரும் கூறுகின்றனர். அடுத்தது விஜயின் லியோ தான் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து இருக்கின்றனர் படம் வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி கோலாகலமாக ரிலீஸ் ஆக உள்ளது.

அதற்கு முன்பாக ரசிகர்களை மகிழ்விக்க இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் என அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில்  லியோ படத்தின் முதல் பாதியை ஒரு பிரபலம் பார்த்துவிட்டு மேடையில் பேசியுள்ளார் அவர் வேறு யாரும் அல்ல லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தான் அவர்  சொன்னது என்னவென்றால் லியோ படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டு..

லோகேஷ்க்கு போன் “சூப்பரா இருக்கு” விஜய் சூப்பரா பண்ணி இருக்காரு என சொன்னேன் உடனே லோகேஷ் இயக்குனரே நான் தான் என கூறினார். இந்த தகவல் தற்போது தளபதி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது மேலும் லலித் குமார் பேசிய அந்த வீடியோவை இணையதள பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.