இயக்குனர் லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் படபிடிப்பு தற்போது காஷ்மீரில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து லியோ திரைப்படம் எல்சியு-வில் இணைகிறதா இல்லை விக்ரம் படம் போல லியோ படத்தில் கேமியோ காட்சிகள் இடம் பெற்றிருக்கிறதா என்பது குறித்து பிரபலம் ஒருவர் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் இவர் நடித்தால் விஜய்யை விட இவருக்குதான் விசில் பறக்கும் என்றும் கூறியுள்ளார்.
அதாவது வலைப்பேச்சு அந்தணன் அவர்கள் லியோ திரைப்படத்தில் சரவணன் அண்ணாச்சி நடித்தால் விஜய்யை விட அதிகமான ரெஸ்பான்ஸ் இவருக்கு தான் இருக்கும் என்று அந்தணன் பேசி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது லியோ திரைப்படம் ஃப்ரீ ரிலீஸ் பிசினஸ் மட்டும் 400 கோடியை கடந்து விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படம் வெளியானால் ஆயிரம் கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் கேமியோ ரோலில் சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, கமல், உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக சமீபகாலங்களாக சில தகவல்கள் வெளியாகியிருந்தது இந்த நிலையில் தற்போது ஏஜென்ட் சரவணன் பெயரும் சமீபத்தில் அடிபட்டு இருக்கிறது.
ஆனால் லெஜன்ட் சரவணன் அவர்கள் காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது எடுத்த புகைப்படத்தை ரசிகர்கள் லியோ படத்திற்காக தான் சென்று இருக்கிறார் என்று வதந்தியை கிளப்பி விட்டனர் இந்த நிலையில் அது பொய்யான தகவல் என்று அந்தணன் கூறி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் அவர் இந்த திரைப்படத்தில் நடித்தால் விஜயை விட லெஜன்ட் சரவணனுக்கு தான் அதிக விசில் பறக்கும் என்று கூறி இருக்கிறார். இவருடைய இந்த பேச்சு சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.