தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய 42வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வருகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இவ்வாறு அந்த போஸ்டரில் சூரியன் 42 திரைப்படம் 3d டெக்னாலஜி மூலம் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் மேலும் 10 மொழிகளில் உருவாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த படம் சரித்திர கதை அம்சம் கொண்டதாக உருவாக இருப்பதாகவும் அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனந்தார் ஆகிய கேரக்டர்கள் இருப்பதாகவும் அறிவித்துள்ளார்கள். இவ்வாறு மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது. இதுவரையிலும் இது போன்ற கதை அம்சமுள்ள திரைப்படங்கள் தமிழில் வெளிவராத நிலையில் தமிழ் திரைவுலகிற்கு இந்த படம் மிகவும் வித்தியாசமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் சூர்யாவை தொடர்ந்து திஷா பதானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார் மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகி வருவதாகவும் வெற்றி பழனிசாமி ஒலிப்பதிவில் நிஷா யூசுப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருவதாகவும் அறிவித்துள்ளார்கள். மேலும் கமலஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து சூரியா அசத்தியிருந்தார்.
இதனை தொடர்ந்து வாடிவாசல் உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது இவர் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.