தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக சமீப காலங்களாக கலக்கி வரும் தனுஷ் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது அந்த வகையில் தற்போது இவர் தனது 44 வது படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இத்திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் இவ்வாறு இவர்களின் கூட்டணியில் உருவாகிவரும் இத்திரைப்படத்திற்கு திருச்சிற்றம்பலம் என பெயர் வைத்துள்ளனர். இவர்களை தொடர்ந்து இத்திரைப்படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இவர்களைத் தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர், நித்யா மேனன்,ராஷி கண்ணா ஆகியோர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் கதை திரைக்கதை மற்றும் வசனங்கள் என அனைத்தையும் தனுஷ் எழுதியுள்ளார் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பம், அனேகன், வாகை சூடவா போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படத்தின் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் விரைவில் முடிய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் பாண்டிச்சேரி, சென்னை, புதுக்கோட்டை,குற்றாலம் போன்ற இடங்களில் படப்பிடிப்புகளை படக்குழுவினர்கள் நடத்தினர்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் பேட்ச் வொர்க் படப்பிடிப்பின் போது நடிகர் தனுஷ் மற்றும் பிரகாஷ்ராஜ் எடுத்துக்கொண்ட BTS புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும் மேட் தொழில் நுட்பத்தில் கார் சாலையில் செல்லும் காட்சிகளும் எடுக்கப்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது இத்திரைப்படத்தினை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரியா பவானி சங்கரின் புதிய கேரக்டர் போஸ்டரை வெளியிட்டுள்ளது.கிராமத்து தென்றல் என்ற தலைப்புடன் போஸ்டர் அமைந்துள்ளது விரைவில் இத்திரைப்படம் தியேட்டரில் இருக்கம் என்று எதிர்பார்க்கலாம்.
Thiruchitrambalam… Priya Bhavani Shankar as Ranjani pic.twitter.com/zzAYy0QHTJ
— Dhanush (@dhanushkraja) June 10, 2022