நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். அதேபோல் இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இவர்கள் இருவரும் காதலித்து வருவது ஊரறிந்த உண்மை. மேலும் இவர்கள் காதலை அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோ மூலம் வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
அதேபோல் இவர்கள் இருவரும் எப்பொழுது திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனால் தற்பொழுது வினேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தங்களுடைய திருமண தேதியை அறிவித்துள்ளதாக தகவல் ஒன்று காட்டுத்தீ போல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
இந்த நிலையில் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு பல நடிகர் மற்றும் நடிகைகள் தங்களுடைய அம்மா புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறி வருகிறார்கள் அந்த வகையில் அன்னையர் தினத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் விக்னேஷ் சிவன் தன்னுடைய அம்மாவுக்கு நயன்தாராவுடன் இணைந்து மாறி மாறி முத்தம் கொடுக்கிறார் நயன்தாராவின் அன்போடு விக்னேஷ் சிவனின் அம்மா அரவணைத்து இருக்கும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவிற்கு கேப்ஷனாக விக்னேஷ் சிவன் கூறியதாவது.
அம்மா உங்கள் மீது நான் வைத்திருக்கும் அன்பை தினந்தோறும் வெளிப்படுத்துவதே என் வாழ்க்கை என் வேலைகளை எல்லாவற்றிலும் எங்களுடன் இருப்பீர்கள் என் வாழ்நாள் முழுவதும் உங்கள் மீது அன்பை நான் வெளிப்படுத்துவேன் என்று பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பதிவில் அஜித்தின் வலிமை படத்திற்காக விக்னேஷ் சிவன் எழுதிய நான் பார்த்த முதல் முகம் நீ என்ற பாடல் ஒலிக்கிறது இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்