“விஜய் எல்லோருடைய வீட்டின் வாரிசு”… எப்பொழுதும் கூட்டு குடும்பம் தான் என நெகிழ்ச்சியாக பேசிய தாய் ஷோபனா.

vijay
vijay

மிகுந்த எதிர்பார்ப்புக்கு நடுவில் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள். மேலும்  ரசிகர்களை பூர்த்தி செய்ததா வாரிசு ட்ரெய்லர் என ரசிகர்களும் சோசியல் மீடியாவில் கலந்துரையாடி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாகிய அஜித், விஜய் இருவரின் திரைப்படங்களும் நீண்ட வருடங்களுக்கு பிறகு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் டிரைலர் டிசம்பர் 31ஆம் தேதி அன்று வெளியான நிலையில் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வாரிசு திரைப்படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தின் டிரைலர் வெளியான 10 நிமிடங்களில் 10 லட்சம் பார்வையாளர்களை பற்றி பெரிதும் சாதனையை பெற்றது. இந்த படத்தில் கூட்டுக்குடும்பத்தின் கதையை கூறும் வகையில் இந்த படத்தின் டிரைலரில் வசனகள் இடம் பெற்று இருந்தது.

இப்படிப்பட்ட நிலையில் நடிகர் விஜய் எங்கள் வீட்டில் பிறந்திருந்தாலும் அவர் அனைவர் வீட்டின் வாரிசு என நடிகர் விஜயின் அம்மா பேசியுள்ள ஆடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது அவர் கூறுகையில், வாரிசு திரைப்படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு எல்லாரும் இப்போவே குடும்ப திரைப்படம்னு கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க அது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ஆல்ரெடி வாரிசு திரைப்படத்தைப் பற்றி உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. விஜய் எங்க வீட்டில் எங்க குடும்பத்தில் பிள்ளையாக பிறந்திருந்தால் இன்னைக்கு அனைவர் குடும்பத்திலும் ஒரு பிள்ளையாக மாறியதால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. விஜய் எப்பொழுதும் கூட்டு குடும்பத்தில் தான் இருக்கிறார் சின்ன வயதில் இருந்தே விஜய்க்கு அனைவரையும் என்டர்டைமென்ட் செய்வது மிகவும் பிடிக்கும் ஆடுவாரு, பாடுவாரு, நல்லா பேசுவாரு, நடிச்சு காட்டுவாரு பெத்தவங்க, வீட்ல இருக்கிறவங்க நண்பர்கள், முக்கியமாக தங்கச்சி மேல பாசமாய் இருப்பாரு.

அதே மாதிரி தான் இப்பொழுதும் அனைவரையும் சந்தோஷப்படுத்துற குடுப்பனையை கடவுள் விஜய்க்கு கொடுத்து இருக்காரு உலகம் முழுவதும் விஜயை தான் சகோதரனாக பாக்குறாங்க விஜய்யின் படம் என்றாலே குடும்பம் குடும்பமாக வந்து தியேட்டரில் பார்க்கிறார்கள். இவ்வாறு இந்த அனைத்து பாக்கியங்களையும் கடவுள் விஜய்க்கு கொடுத்திருப்பார் எனவே விஜய் எல்லோருடைய வீட்டின் வாரிசு எப்பொழுதும் கூட்டு குடும்பம் தான் என விஜயின் தாய் சோபனா மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.