யானை ஒன்று ஆறு நாட்களாக நீலகிரி மாவட்டம் கூடலூர் வனத்துறை பகுதியில் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது காரணம் தன் இறந்துபோன குட்டியை யாரேனும் தூக்கி சென்று விடுவார்கள் என்று பயந்து அருகிலேயே நின்று கொண்டு இருந்தது. குட்டியின் சடலத்தை மீட்க முடியாமல் மக்களும் வனத்துறையினரும் தவித்து வந்தனர்.
கூடலூரில் காட்டு யானைகள் வனவிலங்குகளால் ஊருக்குள் புகுந்து அதிகம் பாதிப்பு ஏற்படுத்தியது வயல்கள் தேயிலைத் தோட்டம் மற்றும் தோப்புகளை சேதப்படுத்தியது.
வீடியோ காலை நிலத்தில் தேயிலை தோட்டத்தில் யானை பிளிறும் சத்தம் கேட்டு மக்கள் ஓடி வந்தனர் அங்கு மூன்று யானைகள் இருந்தன அதில் ஒரு யானைஅழுது கொண்டிருந்தது அங்குள்ள புதரில் குட்டி யானை இறந்து கிடந்தது. வனத்துறையினர் குட்டி யானையின் சடலத்தை மீட்க முயன்றனர் அப்போது தாய் யானை வனத்துறையின் ஜீப்பை துரத்தியது.
வனத்துறையினர் பட்டாசு வைத்து துரத்த நிணைத்தாலும் யானை ஏற்கனவே கோபமாக உள்ளதால் பயந்து வேண்டாம் என்று விட்டு விட்டார்கள்.தாய் யானை அந்த இடத்தை விட்டு நகரவில்லை குழியில் உள்ள குட்டி யானையை செந்நாய்கள் அன்றிரவே கடித்து குதறியது.
ஆறு நாட்கள் ஆகியும் அந்த இடத்தை விட்டு தாய் யானை நகரவில்லை. அந்த யானை உடன் வந்த மற்ற யானைகள் காட்டிற்கு திரும்பி சென்று விட்டன ஆனால் இந்த யானை அழுது கொண்டே இருந்தது. யானையின் பாசத்தை பார்த்து மக்களும் சாப்பிடாமல் இருந்தனர்.
இந்த தாய் பாசம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.