தமிழ் சினிமா உலகில் பல்வேறு டாப் ஹீரோக்கள் ரஜினியின் இடத்தை பிடிக்க போராடுகின்றனர் அவர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய் இவர் வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து அசத்தி வருகிறார் தற்போது கூட இவர் தனது 66 வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கிறது இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, ஜெயசுதா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்
இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தில் ராஜூ தயாரிக்கிறார். விஜயை வைத்த ஒரு வித்தியாசமான கதை களத்தில் இந்த படத்தை வம்சி இயக்கி வருகிறார். தளபதி விஜய் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் கைகொடுத்து ஒரு ஆக்சன் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்த டாப் இயக்குனருடன் கைகோர்க்கும் விஜயின் சினிமா பயணம் உயர்ந்து கொண்டே இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் ஆசிய அளவில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது முதல் 100 இடத்தைப் பிடித்த பிரபலங்கள் யார் என்பதுதான்
அந்த வகையில் தளபதி விஜய் மக்களால் அதிகம் தேடப்பட்டவர்கள் லிஸ்ட்டில் இருக்கிறார் ஆனால் அவருக்கு எத்தனாவது இடம் கிடைத்துள்ளது என்பது குறித்துதான் தற்பொழுது பார்க்க இருக்கிறோம். தளபதி விஜய்க்கு இருபத்தி இரண்டாவது இடம் கிடைத்துள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தில்..