Morani, a Hindi actress who donated her blood plasma for corona treatment: இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை அனைவரும் அறிந்ததே.
கொரோனா வைரஸினால் சாமானியர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கரீம் மோரானி மற்றும் அவரது மகள்கள் ஜோவா மோரானி மற்றும் ஷாஜா மோரானி ஆகியோர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு பின் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பினர்.
நடிகை ஜோவா மோரானி ஷாருக்கானின் பிளாக்பஸ்டர் திரைப்படமான ஓம் சாந்தி ஓம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். மேலும் மஸ்தான், பாக் ஜானி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் இவர் டிஜிட்டல் பிளாட்பார்மில் ஜி5வின் அகூரி மற்றும் பூத் பூர்வாவில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து கொரோனாவினால் பாதிக்கப்பட்டவருக்கு பிளாஸ்மா தெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதற்கு நடிகை ஜோவா தானாகவே முன்வந்து ரத்த பிளாஸ்மாவை கொரோனா சிகிச்சைகாக வழங்கினார். தற்போது இந்த செய்தி இனையதளத்தில் வைரலாகி வருகிறது.