கோபியை பற்றிய உண்மைகளை ராதிகாவிடம் போட்டுடைத்த மூர்த்தி.. வெளியான அடுத்த வார புரோமோ.!

pakkiyalaxmi
pakkiyalaxmi

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் படும் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா மக்கள் பலரின் மனம் கவர்ந்த ஹீரோயினாக நடித்து வருகிறார் ஆனால் அவரது கணவராக கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் மக்கள் அனைவரின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.

ஏனென்றால் இந்த தொடரில் பாக்கியாவிற்கு  தெரியாமல் வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள இருப்பதால் இதுபோன்ற  தில்லு முல்லு வேலைகளை மக்கள் கமெண்டுகளில் திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் தொடர்.

இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகின்றன. கோபியின் இந்த கீழ்த்தரமான செயல் மூர்த்தி மற்றும் தனம் ஆகிய இருவருக்கும் தெரிய வருகின்றன. மூர்த்தி கோபி இடம் தனியாக சென்று நீங்கள் செய்வது கொஞ்சம் கூட சரியில்லை ஒரு குடும்பத்தை இப்படி ஏமாற்றி வருகிறார்கள் என சத்தம்போட்டு திட்டி வருகிறார்.

கேட்ட உறவினர்கள் என்ன ஆச்சு என கேட்டதற்கு மூர்த்தி அவருக்கு தெரிந்த உண்மையை சொல்ல முயற்சிக்கிறார் அதனால் கோபி பயப்படுகிறார் எப்படி இருக்கின்ற நிலையில் பின்பு மூர்த்தி மற்றும் தனம் இருவரும் ராதிகா வீட்டுக்கு சென்று நீங்கள் திருமணம் செய்து கொள்ளப்போகும்.

கோபி நல்லவரே கிடையாது எனக் கூறுவது போன்று அடுத்த வார புரோமோ வீடியோவில் வெளியாகியுள்ளது இதனால் மூர்த்தி பாக்யாவின் கணவர்தான் கோபி என மற்ற உண்மைகளையும் சொல்லுவாரா என்பது அடுத்த வாரம் பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும். இதோ அந்த ப்ரோமோ