‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடித்திருக்கும் குக் வித் கோமாளி பிரபலம்..

sivakarthikeyan

தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி பிறகு படிப்படியாக தொகுப்பாளராகவும் பணியாற்றி தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் டாக்டர், டான் போன்ற திரைப்படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் வெளியாக இருக்கிறது. மாவீரன் திரைப்படத்தினை மடோன் அஸ்வின் இயக்கியிருக்கும் நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக அதிதி சங்கர் நடித்துள்ளார்.

மேலும் இதனை அடுத்து இந்த படத்தில் மிஸ்கின், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் இந்த படம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிட இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர்.

maveeran
maveeran

மேலும் விரைவில் படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட இருக்கிறார்கள். தற்பொழுது மாவீரன் திரைப்படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடித்து இருக்கும் நிலையில் அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அது வேறு யாருமில்லை புதிய கோமாளியாக இந்த சீசனில் நன்றி கொடுத்த மோனிஷா தான்.

மோனிஷா தான் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் தங்கையாக நடித்திருக்கிறார். மோனிஷா குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்கு முன்பு பெரிதாக பிரபலம் அடையவில்லை குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.