Serial actress: ஏராளமான நடிகைகள் நடித்த முதல் திரைப்படங்களிலேயே பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகியவர்கள் இருக்கின்றனர். அதேபோல் தற்பொழுது சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகளையும் பார்க்க முடிகிறது.
அந்த வகையில் விஜய் உடன் நடித்த பிரபல நடிகை தற்போது சீரியலில் நடித்து வருவது குறித்து பார்க்கலாம். கடந்த 1999ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மின்சார கண்ணா. இந்த படத்தில் ரம்பா, குஷ்பூ, மணிவண்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
மேலும் மின்சார கண்ணா படத்தில் ஐஸ்வர்யா என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை மோனிகா காஸ்ட்லினோ. மும்பையை பூர்விகமாக கொண்ட மோனிகா ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அப்படி மின்சார கண்ணா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவருக்கு இந்த படம் நல்ல வரவேற்பினை பெற்று தந்தது.
ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் மீண்டும் ஹிந்தி சினிமாவிலேயே நடிக்க தொடங்கினார். அப்படி ஹிந்தியில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் மோனிகா கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் பிராகேஷ் சிங்க் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
ஆனால் திருமணம் செய்துக் கொண்ட ஓராண்டிலேயே விவாகரத்து பெற்ற பிரிந்த மோனிகாவிற்கு சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே வேறு வழி இல்லாமல் சின்னத்திரை பக்கம் திரும்பினார். அப்படி தற்பொழுது வரையிலும் தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.