தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் முரளி.இவரது காலக்கட்டத்தில் ரஜினி ,விஜயகாந்த், கமல் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தாலும் தனக்கென ஒரு ஸ்டைலை பிடித்து அதில் பயணித்தவர் முரளி என்பது குறிப்பிடத்தக்கது இவர் ஆரம்பத்தில் கன்னட சினிமாவில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.
இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் 1984 ஆம் ஆண்டு பூவிலங்கு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து அவர் தமிழில் தன்னை தக்க வைத்துக்கொள்ள முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அந்த வகையில் வெற்றிகொடிகட்டு ,இரணியன், பொற்காலம், சுந்தரா டிராவல்ஸ் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் மட்டுமல்லாமல் மற்ற முன்னணி நடிகர்களுக்கு சவால் விட்டார் முரளி.
இதனைத் தொடர்ந்து அவர் வித்தியாசமான கதை களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்தார் இருப்பினும் அவர் உடல்நலக்குறைவு காரணமாக 2010 ஆம் ஆண்டு இறந்தார்.முரளி அவர்கள் இறப்பதற்கு முன்பாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார் அதில் அவர் கூறியது
நான் சினிமாவில் நடிக்க வந்தபோது ரொம்ப கருப்பாக இருந்த காரணத்தினால் என்னை அசிங்கப் படுத்தினார்கள் மட்டுமல்லாமல் படப்பிடிப்பில் என்னை கண்டு கொள்ள மாட்டார்கள் என் அப்பாவிடம் இவரெல்லாம் ஏன் ஹீரோவாக நடிக்க வந்துள்ளார் என கேவலப்படுத்தி பேசியுள்ளனர்.
அப்பொழுது நான் படங்களில் நடிக்கும்போது எனக்கு கேரவன் கூட சரியாக தரமாட்டார்கள் அப்பொழுது எல்லாம் கண்ணீர் விட்டு என் அம்மாவிடம் அழுதேன். என்னை சினிமா உலகில் யாரும் அந்த அளவிற்கு என்னைக் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் தமிழ்மக்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி என குறிப்பிட்டிருந்தார்.