விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2. பொதுவாக ஒரு சீரியல் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றுவிட்டார் அதனை இரண்டாவது சீசன் ஒளிபரப்பு வதையும் பழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் தான் ஈரமான ரோஜாவே சீரியலில் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஈரமான ரோஜாவே என்ற பெயரை மட்டும் வைத்துக்கொண்டு கதை மாற்றத்துடன் பல பிரபலங்களின் கூட்டணியில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் கலவை விமர்சனத்தை பெற்று வந்தாலும் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
மேலும் இதில் தம்பதியினர்களுக்கு மாறி மாறி திருமணம் நடக்கும் நிலையில் அவர்கள் அதனை எப்படியாவது ஏற்றுக்கொண்டு வாழ்ந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறார்கள். இதற்கு இடையே ஏராளமான பிரச்சனைகள் அரங்கேரி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த சீரியலில் நடித்த ஒரு முக்கிய கதாபாத்திரம் விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஈரமான ரோஜாவே 2 சீரியலில் முதன்முறையாக இந்த மாற்றம் நடைபெற்று உள்ளது அதாவது இதில் அருணாச்சலம் என கதாநாயகர்களின் அப்பாவாக நடித்த வருபவர் இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளார். இவருக்கு பதிலாக மற்றொரு பிரபலம் நடிக்க இருக்கிறார் இந்த பிரபலமும் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது எனவே அவர் தற்பொழுது ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த சீரியலில் ஹீரோவாக முதல் சீசனில் நடித்த திரவியம் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார் மேலும் இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்த கேப்ரில்லா மற்றும் சின்னத்திரை பிரபல நடிகர் சித்தார்த் உள்ளிட்ட இன்னும் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.