செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட மோகன்ஜி.! இணையத்தளத்தில் வைரல்.

selvaragavan-and-mohan-ji-
selvaragavan-and-mohan-ji-

இயக்குனர் செல்வராகவன் அண்மைகாலமாக படங்களை இயக்குவதையும் தாண்டி நடிப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இயக்குனர் செல்வராகவன்  விஜய்யின் பீஸ்ட், கீர்த்தி சுரேஷுடன் சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்து உள்ளார் இந்த படங்களும் நல்ல வரவேற்ப்பை பெற்றது இதில் செல்வராகவனின் நடிப்பும் மிரட்டும் வகையில் எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்பையும் கைப்பற்றி வருகிறார் மறுபக்கம் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது தம்பி தனுஷ் உடன் கைகோர்த்து நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்களை இயக்கி அசத்திய மோகன் ஜி புதிதாக ஒரு கதையை உருவாக்கியுள்ளார் அந்த படத்தில் நடிகர்  நட்டி நட்ராஜ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் இந்த படத்திற்கு சாம் இசையமைக்கிறார் இந்த படத்திற்கு பகாசூரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மோகன்ஜி அண்மைக்காலமாக சமூக அக்கரை உள்ள படங்களை இயக்கி வந்த நிலையில் இந்த படமும் சமூக அக்கரை உள்ள கருத்துக்களை எடுத்து வைக்கும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளது. அந்த போஸ்டரில் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற வாக்கியத்துடன் மகாபாரதம் புத்தகம் இடம் பெற்றுள்ளது இந்த படம் இந்த ஆண்டு திரைக்கு  வெளிவரும் எனவும் படக்குழு சொல்லி உள்ளது.