சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் கௌதம் மேனன். இவர் ஆக்சன் மற்றும் காதல் போன்ற படங்களை எடுப்பதில் வல்லமை பெற்றவர் கௌதம் மேனன் என்பது நாம் அறிந்ததே இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றி அதோடு மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல ஒரு வரவேற்பு போகிறது.
இதனாலேயே அவர் தமிழ் சினிமாவில் தற்போது பல இளம் இயக்குனர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார். தற்பொழுது அவர் படங்களிலும் நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது சுகர் சல்மான் நடிப்பில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப் படத்தில் போலீஸ் அதிகாரியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது இயக்குனராகவும் நடிகராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சிம்பு, திரிஷா ஆகியோரின் நடிப்பில் டயல் செய்தேன் எண் என்ற குறும்படம் உருவாகியிருந்தது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் கதையை மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த குறும்படத்தில் ஏற்கனவே திருமணமாகி விட்ட திரிஷாவிற்கு அவருடைய முன்னாள் காதலர்கள் சிம்பு போன் செய்து தன்னுடைய காதலை கூறுவது போல எடுக்கப்பட்டிருந்தது. திரிஷா இந்த குறும்படத்தில் பாதி ஐ லவ் யூ, ஐ நீட் யூ என்று சொல்லிக்கொண்டே இருப்பார் இறுதியில் திரிஷா சிம்பு தனது மூன்று குழந்தைகளை சொல்லி ஒரே போடாக போட்டு விடுவார்.
இந்த படத்தை பார்த்த பலரும் கழுவி ஊற்றி வந்த நிலையில் திரௌபதி, பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குனரான மோகன்ஜி அவர்கள் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.அவர் கூறியது இன்றைய கால இளைஞர்கள் பலர் உங்கள் படங்களில் ஸ்டைலை பின்பற்றி வருகிறார்கள். இது போன்ற படங்களின் மூலம் அவர்களின் மனதில் விஷத்தை விதைக்க வேண்டாம் என குறிப்பிட்டார்.