சின்ன பட்ஜெட்டில் பல வெற்றி படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் மோகன் ஜி இவர் முதலில் பழைய வண்ணாரப்பேட்டை என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார் அதன் பிறகு திரோபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களும் இவருக்கு வெற்றியை பெற்று தந்தன. அதனால் இதுவரை இவரது பெயர் திரை உலகில் பெரிய அளவில் பேசப்பட்டது.
சிறு இடைவேலைக்கு பிறகு நடிகரும் இயக்குனருமான செல்வராகவனுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து பகாசூரன் என்னும் படத்தை எடுத்தார். இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி ஒரு வழியாக பிப்ரவரி 17ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது இந்த படத்தை தொடர்ந்து அவரது தம்பி தனுஷின் வாத்தி திரைப்படமும் வெளியானது.
பகாசூரன் திரைப்படம் இந்த சமுதாயத்திற்கு தேவையான நல்ல கருத்துக்கள் பொருந்திய ஒரு படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் இந்த படத்திற்கான வரவேற்பு அமோகமாக இருந்தது. மேலும் இந்த படத்தில் செல்வராகவனுடன் இணைந்து நட்டி நடராஜன், தேவதர்ஷினி, கூல் சுரேஷ், மன்சூர் அலிகான், ராதாரவி மற்றும் பலரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்திருந்தனர்
இன்னும் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இதுவரை மட்டுமே ஆறு கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் பகாசூரன் படக்குழு சக்சஸ் மீட் வைத்து வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி உள்ளது. இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட GTM presents நிறுவனத்தின் தலைவர் கௌதம்..
பகாசூரன் படத்தை இயக்கி வெற்றிகண்ட மோகன் ஜி க்கு தங்க மோதிரம் மற்றும் 5 லட்சம் மதிப்பு உள்ள வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது இந்த பிரஸ்மீட்டில் மோகன் ஜி உடன் இணைந்து அஜித்தின் மச்சான் ரிச்சட் ரிஷி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.