திரோபதி இயக்குனரின் அடுத்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு இதுதான்.! பூஜையுடன் வெளியாகிய புகைப்படம்

mohan g
mohan g

இயக்குனர் மோகன் ஜி பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அதன்பிறகு திரவுபதி என்ற திரைப்படத்தை இயக்கிய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் பல சர்ச்சைகளை சந்தித்தது.

சர்ச்சைகள் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது இந்த நிலையில் மோகன்ஜி அவர்கள் ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தையும்  இயக்கினார். இந்த நிலையில் தற்பொழுது தான்  அடுத்த திரைப்படத்திற்கு ரெடியாகிவிட்டதை அறிவிக்கும் விதத்தில்  தற்பொழுது அடுத்த திரைப்படத்தின் டைட்டிலை சற்றுமுன் அறிவித்துள்ளார்கள்.

இயக்குனர் மோகன் ஜி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் செல்வராகவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் அதுமட்டுமில்லாமல் நட்டி நடராஜ் அவர்களும் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார் இதனை சமீபத்தில் மோகன் ஜி அவர்களே அறிவித்திருந்தார்.

மேலும் இந்த திரைப்படத்திற்கு விக்ரம்வேதா திரைப்படத்திற்கு இசையமைத்த சாம் சிஎஸ்  தான் இந்த திரைப்படத்திற்கும் இசையமைக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற திங்கட்கிழமை தொடங்க இருப்பதாகவும் தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதளமான ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் பூஜை முத்துமலை முருகன் அருளுடன்  பூஜை நடைபெற்றுள்ளது இந்த திரைப்படத்திற்கு தற்பொழுது “பகாசூரன்” என டைட்டில் வைத்துள்ளார்கள் இந்த டைட்டில் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதால் கண்டிப்பாக இதுவும் ஏதாவது ஒரு சர்ச்சை ஏற்படுத்தும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இயக்குனர் மோகன் ஜி அவர்களுக்கு  வாழ்த்துக் கூறிய வருகிறார்கள் ரசிகர்கள். அவர் வெளியிட்டுள்ள பதிவில் முத்துமலை முருகன் அருளுடன் இன்று பூஜை இனிதே நடைபெற்றது அடுத்த திரைப்படத்தின் தலைப்பு பகாசூரன் திங்கள் முதல் படப்பிடிப்பு ஆரம்பம் என அறிவித்துள்ளார்.