திருமணத்திற்கு பின் தடம்புரண்ட மோகினியின் வாழ்க்கை..! பல்வேறு மன கஷ்டத்திற்கு பிறகு மோகினியின் தற்போதைய நிலை..!

mohini
mohini

90ஸ் காலகட்டத்தில் நடித்த ஒரு சில பிரபலமான நடிகைகளை மட்டும் இன்றும் மறக்கவே முடியாது ஏனெனில் அவர்கள் நடித்தபோது ரசிகர்களை கவர்ந்தது தான் காரணம் அந்த வகையில் அன்று பிரபலமாக இருந்த நடிகைகள் பலரும் தற்போது என்ன செய்கிறார் என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் நடிகை மோகினி பற்றி ஒரு சுவாரஸ்யமான விஷயம் வெளியாகி உள்ளது. நடிகை மோகினி தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்டவர் இவர் 1991 ஆம் ஆண்டு வெளியான ஈரமான ரோஜாவே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நான் பேச நினைப்பதெல்லாம், நாடோடிபாட்டுக்காரன், புதியமன்னர்கள் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்த நடிகை மோகினி திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் சில தொலைக்காட்சி தொடர்களிலும் கூட தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டி உள்ளார்.

இவ்வாறு திரைப்படத்தில் இவர் நடிக்கும் போது காதல் பகடை என்ற ஒரு தொடரிலும் நடித்து உள்ளார்.  அந்த வகையில் கடைசியில் கடந்த 2006ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான ராஜராஜேஸ்வரி என்ற சீரியலிலும் நடிகை மோகினி நடித்துள்ளார். இவ்வாறு இதனைத் தொடர்ந்து நடிகை மோகினி என்ன ஆனார் என்ன செய்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை.

ஆனால் அதன் பின்னர் ஒரு பிசினஸ் மேன் பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு திருமணத்திற்கு பிறகு அமெரிக்கா பக்கம் சென்று செட்டில் ஆகிய நமது நடிகை ஒரு மகனைப் பெற்றெடுத்து உள்ளார். பெண் வெகு காலங்கள் கழித்து மலையாளத்தில் கலெக்டர் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

mohini
mohini

இந்நிலையில் தற்போது சினிமாவிற்கு டாட்டா காட்டிவிட்டு வேறு பாதையை தொடர்ந்த நமது நடிகை தன்னுடைய தாய் தந்தை இந்து மதமாக இருந்தாலும் இவர் அமெரிக்கா சென்று அதன் பிறகாக கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டார்.  இந்நிலையில் தற்போது மோகினி கிறிஸ்தவ மத போதகராக இருந்து வருகிறாராம்.

mohini-1
mohini-1