பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தன்னுடைய சிறந்த திறமையை வெளி காட்டுவதன் மூலமாக எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடுகிறார்கள்.
இவ்வாறு அந்த பிரபலத்தை பயன்படுத்திக்கொண்டு தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர்கள் பிரபல நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் அறந்தாங்கி நிஷா.
இவர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராமர் வீடு கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய திறமையை வெளிக்காட்டி உள்ளார்.
இவர் தன்னுடைய திறமையின் மூலமாக வெள்ளித்திரையில் மாரி 2 மட்டுமின்றி ஒரு சில திரைப்படங்களில் நடித்த தன்னுடைய நடிப்ப திறனையும் வெளிக்காட்டி உள்ளார். பொதுவாக அறந்தாங்கி நிஷா காமெடி செய்யும் ரகமே வேறுதான்.
ஏனெனில் மற்ற காமெடி நடிகர்கள் தங்களுடைய வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலமாக காமெடி செய்வார்கள் ஆனால் அறந்தாங்கி தன்னுடைய வாயை திறந்தாலே ரசிகர்கள் ஆட்டோமேட்டிக்காக சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இவ்வாறு பிரபலமான நமது அறந்தாங்கி நிஷா சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர் மத்தியில் பிரபலமாகி உள்ளார். இந்நிலையில் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியிலும் இவர் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் தன்னுடைய திருமண நாளுக்கு தானே வாழ்த்து சொல்லி தன்னுடைய கணவருடன் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இவ்வாறு வெளிவந்த புகைப்படமானது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.