விஜய் டிவி தொலைக்காட்சி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்த சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை அடுத்தடுத்த சீசனாக எடுத்து மக்களுக்கு விருந்து கொடுப்பது வழக்கம் அந்த வகையில் பிக் பாஸ் சீசன் நல்ல வரவேற்ப்பை ஆரம்பத்திலேயே பெற்றதால் தற்போது சீசன் சீசனாக நடைபெற்று வருகிறது நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் ஐந்தாவது சீசன் அண்மையில் தான் தொடங்கப்பட்டது.
இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் 10 பெண் போட்டியாளர்களும், 7 ஆண் போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். முதல் முறையாக பிக் பாஸ் வீட்டில் ஒரு திருநங்கை கலந்து கொண்டார் அவர் வேறு யாருமல்ல மக்களின் மனதில் சிறப்பான இடத்தைப் பிடித்த நமிதா மாரிமுத்து தான்.
பிக்பாஸ் வீட்டில் முதல் டாஸ்க். கடந்து வந்த பாதையை பற்றி சொல்ல வேண்டும் இதில் நமீதா மாரிமுத்து தான் கடந்து வந்த பாதைகளில் ஏற்பட்ட சர்ச்சை மற்றும் பிரச்சினைகள் குறித்து புட்டு புட்டு வைத்தார் இது பலரையும் அழ வைத்தது. குறிப்பாக போட்டியாளர்களையும் தாண்டி மக்கள் மற்றும் ரசிகர்களையே கண் கலங்க வைத்துவிட்டது அவரது கதை.
மேலும் அந்த உண்மைக் கதையின் பொழுது ஒரு கட்டத்தில் என்னை கொல்ல எங்க அம்மா அப்பாவை என்னை முயற்சிக்கிறார்கள் என அழுது கொண்டே அவர் சொன்னார் இதனால் மக்கள் மற்றும் ரசிகர்கள் அவரது அம்மா அப்பாவை பார்க்க தேடினர் ஒரு வழியாக தற்போது அவர்கள் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் கசிந்துள்ளது.
இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..