தளபதி விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. லியோ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வந்தது அடுத்ததாக சென்னையிலும் நடைபெற்றது.
இந்த திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், ஆகியவர்கள் தங்களின் படப்பிடிப்பை முடித்துள்ள நிலையில் மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், அர்ஜுன், ஆகியோர்கள் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நிலையில் விக்ரம் மற்றும் துணிவு திரைப்படத்தில் பயன்படுத்திய அதிநவீன கேமராவை லியோ திரைப்படத்திலும் பயன்படுத்த இருக்கிறது படக்குழு.
ஏற்கனவே விக்ரம் மற்றும் துணிவு திரைப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்காக mocobot பயன்படுத்தினார்கள் அதே போல் லியோ திரைப்படத்திலும் ஆக்ஷன் காட்சிகளுக்கு mocobot பயன்படுத்த இருக்கிறார்கள் இந்த தகவல் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் ஆக்ஷன் காட்சிகள் சரவெடி போல் தெறிக்கும்படியாக இருக்கும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.
ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவு கலை இயக்குனர் சதீஷ்குமார் ஆகியோர் புகைப்படத்தை பகிர்ந்து படக்குழு ஆக்ஷன் காட்சிகளுக்காக மோகோ பட் கேமராவை பயன்படுத்துவதாக கூறியுள்ளது. மேலும் லியோ திரைப்படத்தில் விஜய், திரிஷா, அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் ,மன்சூர் அலிகான் மேதியு தாமஸ் ஆகியோர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.
மேலும் லியோ திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருவது அனைவருக்கும் தெரியும் இந்த நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி அன்று 2023-ல் இந்த திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.