மாபெரும் வெற்றி படத்தை கொடுத்துவிட்டு சிறிது காலத்திலேயே காணமல் போன இயக்குனர்கள்.! லிஸ்டில் விஜய் பட இயக்குனரும் இருக்கிறாரே

tamil-cinema-directors

சினிமாவில் அதிகமான புதுமுக இயக்குனர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.ஆனால் அதே சமயம் பல இயக்குனர்கள் தன்னுடைய படத்தை இயக்குவதை நிறுத்தி விட்டார்கள். அப்படிப் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தற்போது சினிமா துறையை விட்டு காணாமல் போன இயக்குனர்களை பற்றி தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

பேரரசு; முருகன் பெயரையே தன் படத்திற்கு வைத்து பிரபலமானவர் இயக்குனர் பேரரசு. இவர் தளபதி விஜயை வைத்து திருப்பாச்சி, சிவகாசி, என இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்திருந்தார். அதன் பிறகு  திருப்பதி, திருவண்ணாமலை, பழனி, என அவர் இயக்கிய படங்கள் வெற்றி பெறவில்லை இவர் கடைசியாக தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளியான திருத்தணி படத்தை இயக்கி நடித்திருந்தார்.

perarasu
perarasu

 

சரவணன்;2011ல் வெளியாகி வெற்றியடைந்த எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சரவணன். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படதின் ஒன்றாக இருந்துள்ளது. அதன் பிறகு இவன் வேற மாதிரி, வலியவன், இந்த இரு படங்களை மட்டுமே தமிழில் இயக்கிய இவர் அதன் பிறகு வேறு எந்த ஒரு திரைப்படத்தையும் இயக்கவில்லை.

saravanan

ஷாஜகான்;2007ல் புன்னகை தேசம் எனும் சூப்பர் ஹிட் திரைப்படத்தைக் கொடுத்த ஷாஜகான் அதற்குப் பின்னர் கண்ணாடிப் பூக்கள், என்று ஒரே ஒரு திரைப்படத்தை மட்டுமே இயக்கியுள்ளார்.

சுரேஷ்;2003ல் அரசு படத்தை இயக்கி அறிமுகமானவர் இயக்குனர் சுரேஷ். அதனைத் தொடர்ந்து  கம்பீரம், சபரி,  நம்நாடு போன்ற பல படங்களைiயக்கியுள்ளார்.இவர் கடைசியாக இயக்கிய படம் வவ்வால் பசங்க.

ரமணா;2003ல் விஜயை வைத்து திருமலை எனும் சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்தவர் இயக்குனர் ரமணா. அதைத் தொடர்ந்து சுள்ளான், ஆதி இரு படங்களையும் இயக்கிய இவர் தற்போது சினிமா துறையை விட்டு விலகியுள்ளார்.

அரவிந்த் ராஜ் ;1986ஆம் ஆண்டு ஊமை விழிகள் எனும் சூப்பர் ஹிட்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் ஆர் அரவிந்தராஜ். ஆனால் அதைத் தொடர்ந்து இவர் இயக்கிய உழவன் மகன், சத்திய வாக்கு, கருப்பு நிலா போன்ற படங்கள் வெற்றி அடையவில்லை 2010ஆம் ஆண்டு இவர் இயக்கிய இரண்டு முகம் எனும் படம்தான் தற்போதைக்கு இவருக்கு கடைசி படமாக உள்ளது.

aravinth raj

அகத்தியன்; தேசிய விருது பெற்ற காதல் கோட்டை படத்தை  இயக்கியவர் தான் அகத்தியன். இவர் 1991 இல் வெளியான மாங்கல்யம் தந்துனானே என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து வான்மதி, கோகுலத்தில் சீதை, காதல் கவிதை, காதல் சாம்ராஜ்யம் என பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கி கடைசியாக வெளி வந்த திரைப்படம் நெஞ்சத்தைக் கிள்ளாதே.

ராஜ் கபூர்;  இயக்குனர் மற்றும் நடிகரான ராஜ்கபூரின் முதல் படம் 1991 இல் வெளியான தாலாட்டு கேட்குதம்மா, அதைத்தொடர்ந்து உத்தமராசா, சின்ன ஜமீன், வள்ளல், சமஸ்தானம், அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே, பல படங்களை இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் வம்புச்சண்டை. அதன்பின் படத்தை இயக்காத இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது நந்தினி என்ற சீரியலை இயக்கி வந்தார்.

raj-kaopoor

பாலாஜி சக்திவேல்; பிரமாண்ட இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாலாஜி சக்திவேல். இவரின் முதல் படம் சாமுராய், அதை தொடர்ந்து இவர் இயக்கிய காதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வழக்கு எண் :18/9.

தருன் கோபி; 2006ஆம் ஆண்டு விஷாலை வைத்து  இயக்கிய திமிரு அந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார் தருண்கோபி. அதைத்தொடர்ந்து 2008ஆம் ஆண்டு காளை என்ற பாடத்தை சிம்புவை வைத்து இயக்கியுள்ள இந்த படம் பெரிதும் வெற்றியடையவில்லை. அதன் பிறகு இவரது இயக்கத்தில் எந்த படமும் வெளியாகவில்லை.

சேரன்; தமிழ் சினிமாவில் தரமான இயக்குனர்களில் ஒருவர் சேரன்.  இவரின் முதல் படம் 1997 இல் வெளியான பாரதி கண்ணம்மா, அதன் பிறகு பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை. அதன் பின் சில குடும்ப  பிரச்சனையால் தற்போது எந்த ஒரு திரைப்படத்தையும் இயக்கவில்லை.

seran