ரசிகர்களே கவனிச்சிங்களா.. பிக்பாஸ் 7 ல் இதெல்லாம் மிஸ்.? என்னடா இப்படி பண்றீங்க

biggboss
biggboss

Biggboss 7 : பிக்பாஸ் 7 -வது சீசன் நேற்று அக்டோபர் 1ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. வழக்கம்போல உலகநாயகன் கமலஹாசன் சீரும் சிறப்புமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினார். முதல் போட்டியாளராக காமெடி நடிகர் கூல்  சுரேஷு  என்ட்ரி  கொடுத்தார்.

அடுத்ததாக பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, விஷ்ணு தேவி, மணி சந்திரா,  அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு,  விஷ்ணு விஜய், சரவணா விக்ரம், யோகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, ரைட்டர் பாவா செல்லதுரை, அனன்யா எஸ் ராவ்,  விஜய் என 18 போட்டியாளர்கள் உள்ளே சென்று இருக்கிறார்கள்.

மற்ற சீசன் போலவே இந்த சீசனைகளும் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய சீசனுக்கும் இந்த சீசன் நிறைய மாற்றம் இருக்கு.. அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. கடந்த ஐந்து, ஆறாவது சீசனில் திருநங்கைகள் இடம் பெற்றனர்.

அந்த வகையில் ஐந்தாவது சீசனில் நமிதா மாரிமுத்து பங்கேற்று ஒரு வாரங்களிலேயே வெளியேறினார் ஆறாவது சீசனில் சிவின் பல நாட்கள் இருந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனால் ஏழாவது சீசனில் திருநங்கைக்கு வேலையே இல்லை..

பிக்பாஸ் வீட்டில் சிபாரிசு, நிப்பாட்டிசம் போன்றவர்கள் இருந்தாலும் கடந்த சீசனில் சாமானியராக தனலட்சுமி பங்கேற்று இருந்தார் ஆனால் இந்த தடவை அதுக்கும் வேலை இல்லை. உலகநாயகன் கமலஹாசன் பிக் பாஸில் அரசியல் பேசுவது வழக்கம் ஆனால் இந்த தடவை அரசியல் பேசவில்லை போக போக பார்ப்போம்..