திரைவுலகில் கதைக்கு ஏற்றவாறு நடிப்பை கற்றுத்தரும் இயக்குனர்கள் சமீபகாலமாக நடிக்கவும் வருவதால் பல நடிகர்கள் பட வாய்ப்பை இழந்து நிற்கின்றனர். அதுபோன்றுதான் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட ஷூட்டிங் உருவாகி வருகிறது.
இப்பொழுது வில்லன்களை வைத்து சண்டை போடும் காட்சிகள் எடுக்கப்பட உள்ளது அதற்காக சரியான நடிகர்களை தேர்வு செய்து வருகிறார் அந்த வகையில் இயக்குனர் செல்வராகவன் சமீபகாலமாக நடித்து வருவதால் அவருக்கு இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கொடுத்தது.
ஆனால் செல்வராகவனுக்கு பதிலாக முதன் முதலில் அந்த ரோலுக்காக அனுகப்பட்டவர் எண்ணுமோ மிஸ்கின் தானாம். முதலில் ஓகே சொல்லிவிட்டு திடீரென அதிலிருந்து பின் வாங்கி உள்ளார். அதற்கு காரணம் அதே தேதியில் பிசாசு திரைப்படத்தின் வேலைகள் இருப்பதால் நடிக்க முடியாது என கூறி அதிலிருந்து விலகி உள்ளார்.
பிசாசு 2 படத்தில் விஜய்சேதுபதி மற்றும் ஆண்ட்ரியாயும் நடிப்பதால் அந்த திரைப்படத்தை வேற ஒரு லெவலில் எடுத்து வருகிறார். தனது படத்திற்கு முன்னுரிமை அதிகம் கொடுத்துள்ளதால் விஜய் ரசிகர்கள் தற்போது அப்செட்டில் உள்ளனர் எது எப்படியோ இரண்டு படமும் நல்ல வெற்றியை பெற்றால் போதும் என ஒரு தரப்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இப்பொழுது பணி புரிய வில்லை என்றாலும் இதற்கு முன்பாக “‘யூத்” திரைப்படத்தில் அசிஸ்டன்ட் இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.