தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் மிஸ்கின் இவர் முதலில் உதவி இயக்குனராக இருந்து பின் நடிகராகவ தயாரிப்பாளராக எழுத்தாளர் என பல அவதாரம் எடுத்து திரை உலகில் ஜொலிக்கிறார். இப்பொழுது கூட நடிகர் விஜயின் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படிப்பட்ட மிஸ்கின் முதலில் செல்வாவிடம் உதவி இயக்குனராக இருந்தார்.
பிறகு சின்ன சின்ன படங்களை எடுக்க ஆரம்பித்தார் அப்படி முதலில் சித்திரம் பேசுதடி படத்தை எடுத்தார் அதன் பிறகு அஞ்சாதே அதனைத் தொடர்ந்து துப்பறிவாளன் சைக்கோ என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து அசத்தினார் இப்படிப்பட்ட மிஸ்கின் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது..
செல்வாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தேன் அப்போது யூத் படம் எடுக்கும்போது ஆறு மாத காலம் விஜய் உடன் நான் பேசவே இல்லை அதன் பிறகு விஜய் என்னுடைய கழுத்தை பிடித்து ஏன் அண்ணா என்னிடம் பேச மாட்டேன் என்கிறீர்கள் என கேட்டுள்ளார் அதற்கு நான் ஒரு நல்ல கதையுடன் உங்களை சந்தித்து பேச வேண்டும்..
என இருந்தேன் என கூறினார் பிறகு சித்திரம் பேசுதடி படத்தை எடுத்து ஒரு நாள் விஜய்க்கு போட்டு காட்டி உள்ளார் பிறகு இது உங்களுக்காக எழுதின கதை தான் என கூறி இருக்கிறார் உடனே விஜய் இயக்குனர் மிஸ்கினின் கழுத்தைப் பிடித்து லிப்டில் தள்ளி இந்த கதையை ஏன் எனக்கு சொல்லவில்லை என கேட்டுள்ளார்.
உங்க அப்பா 18 சீன் மாத்தி இருப்பார் நீங்க 18 சீன் மாதிரி இருப்பீங்க நான் தற்கொலை பண்ணி இருப்பேன். அதனால்தான் வேண்டாம் என்று நினைத்தேன் என கூறினார். அந்த கதை வரலாற்று சிறப்புமிக்க ஒரு கதையாக இருக்கும் என கூறினார் மேலும் பேசிய அவர் லியோ படத்தில் விஜய் நன்றாக பார்த்துக் கொண்டார் 20 வருடங்கள் கழித்தும் அப்படியே மாறாமல் இருக்கிறார் என பேசி உள்ளார்.