15 நிமிட காட்சியை காட்டி பல கொடியை அமுக்க நினைக்கும் மிஷ்கின்..! இதுக்கு பேருதான் ராஜதந்திரமோ..!

mishkin

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படத்தை உருவாக்குவதில் வல்லவர் என்றால் அது இயக்குனர் மிஷ்கின் தான் இவர் சமீபத்தில் ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு திரைப்படத்தை இயக்கி வருகிறார் இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு த்ரில்லர் திரைப்படமாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் முடித்துவிட்டு இதனை வெளியிட போவதாக படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளார்கள். அந்த வகையில் இந்த திரைப்படமானது முழுக்க முழுக்க இரவில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இந்த காட்சிகளை பார்க்கும் ரசிகர்களுக்கு பெரிதும் வித்தியாசமாக இருப்பது மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக மிஷ்கின் அவர்கள் கூறியுள்ளார்.

ஆகையால் இத்திரைபடத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமானது மட்டுமல்லாமல் நடிகை ஆண்ட்ரியா இந்த திரைப்படத்தில் 15 வினாடி ஓட்டு துணையின்றி நடிக்க போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு ஆண்ட்ரியாவை பற்றிய எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுயதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதியையும் மிஸ்கின் அவர்கள் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அந்த வகையில்  விஜய் சேதுபதி அவர்கள் இந்த திரைப்படத்தில் 15 நிமிடங்கள் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் அந்தக் காட்சிகள் ஒவ்வொன்றும் மிக சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் வியக்கத்தக்கவும் இருக்கும். மேலும் விஜய்சேதுபதியின் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரே காரணத்தினால் பிசாசு திரைப்படத்தை தெலுங்கிலும் பிசாசி என்ற பெயரில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

விஜய்சேதுபதிக்கு ஏற்கனவே தெலுங்கு பக்கம் மிகவும் நல்ல வரவேற்பு இருக்கிறது அந்த வகையில் தற்போது தெலுங்கில் இத் திரைப்படத்தை வெளியிட்டால் நல்லா கல்லா கட்டலாம் என மிஷ்கின் முடிவு செய்துள்ளார். போகிற போக்கை பார்த்தால் 15 நிமிட காட்சியை வைத்து பல கோடியை அமுக்கலாம் என பிளான் போட்டு உள்ளார்கள் போல.

mishkin
mishkin