சிம்புவுக்கு புதிய கதையை சொன்ன மிஷ்கின் – “கிளைமாக்ஸ்” காட்சியில் மட்டுமே.. இத்தனை பேத்தை போட்டு தள்ளனுமாம்..

simbu-
simbu-

நடிகர் சிம்பு கடைசியாக மாநாடு  படத்தில் நடித்து அசத்தி இருந்தார். இப்படத்தில் இவருடன் கைகொடுத்து கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, ஒய்ஜி மகேந்திரன், சந்திரசேகர், மனோஜ், பிரேம்ஜி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இருந்தனர்.

இந்த திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று இப்பொழுதும் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது  மாநாடு திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக அதுவும் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்ததாக பத்து தல திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாராம் இப்படி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திய  பழைய இடத்தை பிடிக்க ரெடியாக இருக்கிறார் சிம்பு. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களில் கொடுத்து.

மகிழ்வது வரும் இயக்குனர் மிஷ்கின் இப்போ ஆண்ட்ரியா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து பிசாசு 2 என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் நடிகர் சிம்புவை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளாராம் அந்த கதையை சிம்புவுக்கும் ரொம்ப பிடித்திருக்கிறதாம்.

அந்த கதையின்படி கிளைமேக்ஸ் காட்சியில் மட்டுமே நடிகர் சிம்பு 100 பேரை கொலை செய்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்குமாம். மிஸ்கின் இப்படி சொல்லு உள்ளது தற்போது சரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது மேலும் சிம்பு ரசிகர்களும் இப்படி ஒரு படத்தில் சிம்பு நடித்தால் அந்த படம் வரலாற்றில் பேசப்படும் படமாக இருக்கும் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.