தமிழ் சினிமாவில் 2002ஆம் ஆண்டு ரோஜாக்கூட்டம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் ஸ்ரீகாந்த். பின்னர் அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, கனாக்கண்டேன், பூ, மெர்குரி பூக்கள் போன்ற பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த்.
பின்னர் அதனைத் தொடர்ந்து இவர் தெலுங்கு மலையாளம் போன்ற பிற மொழிகளில் தனது ஆர்வத்தை காட்ட ஆரம்பித்தார், பின்னர் அதனை தொடர்ந்து அவருக்கு பல படங்கள் தோல்வியை கொடுத்தாலும், கடைசியாக விஜயுடன் இணைந்து நண்பன் திரைப்படத்தில் நடித்து மீண்டும் தனது இடத்தை பிடித்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இவர் சினிமாவில் நடிக்க ஆர்வத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளார்.
இவரைப் போலவே நடிகை ராய் லட்சுமியும் பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் வாய்ப்பு குறைய ஆரம்பித்ததும் சினிமாவில் வரும் ஒரு சில பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவது போன்றவற்றில் நடித்திருந்தார். ஆனால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை.
மேலும் நடிகை ராய் லட்சுமியும் ஸ்ரீகாந்தும் இணைந்து மிருகா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர்.நடிகை ராய் லட்சுமி காட்டிற்குள் புலியிடம் மாட்டிக் கொள்வது போல் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் நடிகர் ஸ்ரீகாந்தும் இந்த திரைப்படத்தில் பெண்களிடம் சில்மிஷம் செய்யும் மிருகம் போல் நடித்துள்ளார். இவரும் காட்டில் புலி யிடம் மாட்டிக் கொள்கிறார்.இவர்கள் இருவரும் எப்படி புலியிமிருந்து தப்பிபார்கள் என்பது தான் கதை.
இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இதோ அந்த வீடியோ.