தமிழ் சினிமாவில் உலக நாயகன் என போற்றப்படும் நடிகர்தான் கமலஹாசன் இவருடைய நடிப்பில் உருவாகும் திரைப்படங்கள் சமீபத்தில் சொதப்பலாக இருந்தாலும் இதற்கு முன்பாக இவர் நடித்த திரைப்படங்களில் இவருடைய நடிப்புக்கு மயங்காத பெண்களே கிடையாது.
அந்த வகையில் தற்போது பழைய இயக்குனர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் கூட சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளாராம் இதன் காரணமாக இத்திரைப்படத்தில் எதிர்பார்ப்பு அதிகரிப்பது மட்டுமல்லாமல் மாபெரும் வெற்றி பெறும் என ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
ஏற்கனவே நடிகர் கமலஹாசன் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதாபாத்திரம் உள்ளதாக இருக்கும் அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான ஆளவந்தான் திரைப்படம் கூட ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தததுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் அவருடைய நடிப்பு தனித்துவமாக இருந்திருக்கும்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தை பற்றிய ஒரு விஷயம் வெளியாகி உள்ளது அதாவது மிர்ச்சி சிவா அவர்கள் ஆளவந்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு இவர் நடித்த காட்சி புகைப்படமானது தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.
மிர்ச்சி சிவா சென்னை 6 லட்சத்து இருபத்தி எட்டு திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கண்டவர் இதனை தொடர்ந்து சரோஜா ,தமிழ்படம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் காமெடி கலந்த திரைப்படத்தில் அதிகம் நடிப்பதன் மூலமாக ரசிகர்களை எளிதில் கவர்ந்து விட்டார்.