காமெடியனாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்துள்ளவர் நடிகர் சதீஷ். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், சிவகார்த்திகேயன் போன்ற டாப் நடிகர்கள் படங்களில் காமெடியனாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.
இப்படி ஓடிக் கொண்டிருந்தவர் ஒரு சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார் அந்த வகையில் தமிழ் படம் 2 படத்தில் சிவாவுக்கு வில்லனாக நடித்து அசத்தியிருப்பார். காமெடியனாகவும், வில்லனாகவும் நடித்து வந்த சதீஷ் இப்பொழுது ஹீரோவாகவும் நடிக்க ரெடியாகி உள்ளார்.
தலைநகரம் படத்தில் வடிவேலு நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்து இருப்பார் நாய் சேகர் என்ற தலைப்பை வைத்து தற்போது காமெடி நடிகர் சதீஷ் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜ்குமார் என்பவர் இயக்கியுள்ளார் குக் வித் கோமாளி புகழ், பவித்ரா லட்சுமி, ஜார்ஜ் மரியான், ஸ்ரீமன், ஞானசம்பந்தம், லிவிங்ஸ்டன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் வெகு விரைவிலேயே வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் மையம் நடிகர் சதீஷும் நாயிக்கும் உள்ள பிரச்சனையை தான் கதை நாய் மனிதன் போன்றும் சதீஷ் நாய் போன்றோரும் நடந்துகொள்வார்கள் இதில் சதீஷ் நடிப்பு வேற லெவல் இந்தநிலையில் இந்த படத்தில் இருந்து ஒரு சூப்பர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது இந்த படத்தில் நாய் பேசும்.
அந்த நாய்க்கு குரல் கொடுத்தவர் நடிகர் மிர்ச்சி சிவா என்பது குறிப்பிடத்தக்கது. சதீஷ், சிவா இருவருமே நெருக்கமான நண்பர்கள் என்பதால் அவருக்காக சிவா இதனை செய்துள்ளார் என கூறப்படுகிறது படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.