தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், காமெடியனாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் மக்களின் மனநிலையை நன்கு புரிந்துகொண்டு இருந்தார்.
வெள்ளித்திரையில் கால்தடம் பதித்தார் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையிலும் மக்களை கவரும் படியான ஆக்ஷன், காதல், காமெடி கலந்த படங்களையே பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்து வந்ததால் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் மேலும் வசூலும் மிகப்பெரிய அளவில் வாரி குவித்த இதனால் தற்போது சிறந்த இயக்குனர்கள் சிவகார்த்திகேயனுக்கு கதை சொல்ல காத்து வருகின்றனர்.
அந்த அளவிற்கு தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார் இவரது நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் டாக்டர் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. மக்கள் கூட்டம் திரையரங்கில் அலை மோதுகின்றன.
அந்த அளவிற்கு படம் காமெடியாகவும் சிறப்பான கருத்தை எடுத்து உள்ளதால் மேலும் இந்த திரைப்படம் பல நாட்கள் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அர்ச்சனா, தீபா, அருண் அலெக்சாண்டர், யோகி பாபு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். திரைப்படம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே சுமார் 8 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக டாக்டர் திரைப்படம் கூறப்படுகிறது 50% திரையரங்கு இருக்கையுடன் திறக்கப்பட்டு இருந்தாலும் இவ்வளவு வசூல் செய்தது மிகப்பெரிய ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.