தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்கி தனது திறமையை வெளி உலகிற்கு காட்டியவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். மேலும் தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு பெயர்போன விக்ரமுடன் கைகோர்த்து அவர் உருவாக்கியுள்ள திரைப்படம் மகான். இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து துரு விக்ரம், சிம்ரன், வாணிபூஜன், பாபி சிம்கா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த படம் வருகிற 10ஆம் தேதி கோலாகலமாக அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் கார்த்திக் சுப்புராஜ் மகான் படத்தில் நடிகர் விக்ரம் நடிப்பு குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். விக்ரம் சாரிடம் சென்று முதலில் மகான் படத்தின் ஸ்கிரிப்டை கொடுத்தேன். படித்துப் பார்த்தார்.
பிதாமகன் மாதிரியான படங்கள் பண்ண விக்ரம் சாருக்கு நல்ல தீனி போட்டது. அந்த மாதிரி கதையில் ஏதாவது இருந்தா என்று எனக்கு சந்தேகம் இருந்தது சாரிடம் கொஞ்சம் நெருங்கி பழகி ஆரம்பித்த பின் இந்த கதை உங்களுக்கு எந்த வகையில் சரியாக இருந்தது என கேட்டேன்.
இந்த படம் மிகவும் திருப்தியாக இருப்பதாக கூறினார். ஒரு படத்தில் இந்த சீனி இப்படி வந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்து நாம் எழுதி இருப்போம் ஆனால் நடிகர்கள் நடித்து முடித்த பிறகு அந்த காட்சியை வேற லெவலில் இருக்கும். அப்படி இந்த படத்தில் நிறைய சீன்கள் உள்ளன விக்ரம் சார் சட்டையில் மண் ஓட்டுவது மாதிரியான ஒரு காட்சி இடம்பெற்றது அதற்கு நான் சட்டையை மண்ணில் போட்டு புரட்டி எடுத்து வாருங்கள் அல்லது மண்ணெடுத்து கையில் பூசுவார்கள் என நினைத்தேன்.
ஆனால் விக்ரம் சாரோ திடீரென சட்டையைப் போட்டுக்கொண்டு மண்ணில் புரண்டு எழுந்தார். ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டேன் நாம் செய்வது இயற்கையாக இருக்க வேண்டும் செயற்கையாக இருக்க கூடாது என அவர் சொன்னார் அவர் அந்த அளவிற்கு படத்தின் கதைக்காக அர்ப்பணிப்போடு இருப்பது அந்த செட்டில் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்தது.