தமிழ் சினிமாவில் மிக பிரமாண்டமான இயக்குனராக இருப்பவர்களில் நடிகர் கௌதம் மேனனும் ஒருவர். கௌதம் இயக்குனர் எடுக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் வித்தியாசமாக இருப்பது மட்டுமல்லாமல் மிக யோசிக்க தக்க கதை அம்சமாக இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கும் திரைப்படங்களுக்கு என்றே ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது. பொதுவாக கௌதம் மேனன் இயக்கும் திரைப்படங்கள் ஆரம்பத்தில் பல்வேறு குறைகளை சந்தித்தாலும் பின்னர் அதற்கு பஞ்சமே இல்லாமல் வெற்றியையும் கண்டுவிடும்.
இந்நிலையில் கௌதம் மேனன் மின்னலே திரைப்படத்தைப் பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இவர் பேசிய அந்த தகவலானது சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
அதாவது மாதவன் மற்றும் ஷாலினி நடித்த மின்னலே திரைப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் தான் இயக்கி உள்ளார் ஆனால் இந்த படத்தில் இருபது சதவீதம் மட்டுமே அவருடைய பங்களிப்பு இருந்ததாகவும் அவரே கூறியுள்ளார்.
மீதமுள்ள பங்களிப்பு அனைத்துமே அவனையே சேரும் ஏனெனில் இந்த திரைப்படம் முதன்முதலாக 2 பசங்களும் ஒரு பெண்ணும் இருப்பது போல தான் இந்த கதை எழுதப்பட்டது ஆனால் பின்னர் மாதவன் இவை அனைத்தையும் மாற்றி விட்டார்.
அதுமட்டுமல்லாமல் கல்லூரியில் ஒரு பெண்ணுக்காக இரண்டு பசங்க சண்டை போடுவது போல காட்சிகளும் உருவாக்கப்பட்டது மேலும் தன்னுடைய திரைப்படத்தில் வசனம் அனைத்தையும் விவேக் தான் எழுதினாராம் பின்னர் நடிப்பு முழுவதையும் நாசர் தான் பார்த்துக் கொண்டாராம் ஆகவே அவர்கள் இந்த திரைப்படத்தில் அயராது போராடி உள்ளார்கள்.
அன்று முதல் இன்று வரை காதலர்களின் நினைவுச் சின்னமாக இருந்து வரும் மின்னலே திரைபடம் பற்றிய தகவலானது சமூகவலைதளத்தில் மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.