micset sriram latest news: ஒரு காலத்தில் சினிமாவுக்குள் நுழைய வேண்டுமென்றால் படாத அவஸ்தைகள் அவமானங்கள் அனைத்தையுமே சந்தித்துதான் ஆகவேண்டும் ஆனால் தற்போதெல்லாம் யூடியூப் ஃபேஸ் புக் டிக் டாக் என பல்வேறு இணைய செயலிகளை பயன்படுத்தி சினிமாவிற்குள் நுழைந்து விடுகிறார்கள்.
அந்த வகையில் யூடியூபில் பல ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி ஹீரோவாக வலம் வருபவர் தான் ஸ்ரீராம். இவருக்கு தற்போது சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவில் நம்பர்-1 youtube சேனல் என்றால் அது மைக் செட் யூடியூப் சேனல் தான்.
இவ்வாறு இவர் வெளியிடும் வீடியோக்கள் காமெடியாக இருப்பது மட்டுமல்லாமல் சிந்திக்கும் வகையில் இருப்பதன் காரணமாக இவருடைய யூடியூப் சேனலுக்கு என்று ஒரு மாபெரும் ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது.
இதன் காரணமாக இவர் வெளியிடும் ஒவ்வொரு வீடியோவுக்கு மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் வருவது மட்டுமல்லாமல் லைக்குகளும் சப்ஸ்கிரைபரும் குவிந்து கொண்டே இருந்தது.
இந்நிலையில் ஸ்ரீராம் பிளாக் ஷீப் யூடியூப் சேனல் நண்பர்களுடன் இணைந்து ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இதை தொடர்ந்து ஒரு திரைப் படத்தில் ஹீரோவாக நடிப்பதாகவும் உள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக கயல் ஆனந்தி ஹீரோயினாக நடிக்க உள்ளார். இதனால் கோலிவுட் வட்டாரமே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.