Michaung Storm: சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் உதவி செய்வதை வீடியோவாக எடுத்த விளம்பரம் தேடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அதிக அளவில் சோசியல் மீடியாவில் இந்த விளம்பரங்களை பார்க்க முடிகிறது அந்த வகையில் கோடியில் புரளும் பிரபலங்கள் கூட இவ்வாறு விளம்பரம் தேடுவது ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது.
அதாவது தற்பொழுது சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஆயிரம் கணக்கான மக்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு உதவி செய்கிறோம் என விளம்பரம் தேடி உள்ளார்கள் சில திரை பிரபலங்கள்.
இந்த முறை கேங்ஸ்டர் இல்லை மான்ஸ்டர் வெளியானது யாஷ் 19 திரைப்படத்தின் டைட்டில்.!
கமல்ஹாசன்: நடிகர் கமலஹாசன் அவருடைய மக்கள் நீதி மையம் கட்சியின் மூலம் பலருக்கும் உணவுகள் வழங்கப்பட்டது. அந்த வண்டியில் கமலின் போட்டோவும் கட்சியின் பெயரும் இடம் பெற்றது. இவ்வாறு கமல் கூட தான் மக்களுக்கு உதவி செய்கிறேன் என்பதை விளம்பரம் படுத்தும் வகைகள் இதனை செய்திருந்தார்.
விஜய்: அதேபோல் நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு மக்கள் அனைவருக்கும் தங்களால் முடிந்த உதவிகளை கட்டாயம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அப்படி விஜய்யின் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு உணவை வழங்கினார். அப்பொழுது அதில் ஒருவர் விஜய்யின் போட்டோவை கையில் பிடித்துக் கொண்டு போஸ் கொடுத்த புகைப்படம் வைரலானது மேலும் ஓரமாக இருந்த குப்பையை வாரி ஓரமாக போட்டு புஸ்ஸி ஆனந்த் விளம்பரம் செய்தார்.
ஐயோ சாமி ஆள விடுங்க.. விஜய் பட்டதே போதும்.! தயவு செஞ்சு என்ன அப்படி கூப்பிடாதீங்க
நயன்தாரா: தொடர்ந்து பல பிசினஸ்களை ஆரம்பித்து வரும் நயன்தாரா சமீபத்தில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட நாப்கின் பிசினஸை தொடங்கினார். அந்த நாப்கினை சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவசமாக வழங்கினார். எனவே இது குறித்த வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாக இதனையும் தன்னுடைய பிசினஸ் விளம்பரத்திற்காகவே செய்தார் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தனர்.