வெள்ளித்திரையில் தற்போது பல முன்னணி நடிகர்கள் ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கி வருகிறார்கள் ஆனால் அவர்கள்யெல்லாம் ஆரம்ப காலகட்டத்தில் பட வாய்ப்பிற்காக கிடைத்த சின்ன சின்ன வாய்ப்பை பயன்படுத்தி அதன் பின்பு பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஒரு சில நடிகர்கள் சின்னத்திரையில் இருந்தும் ஒரு சில நடிகர்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியும் தற்பொழுது புகழ்பெற்று விளங்கி வருகிறார்கள் அவ்வளவு ஏன் எம்ஜிஆர் கூட ஆரம்ப காலகட்டத்தில் எடுத்தவுடனே கதாநாயகனாக ரசிகர்களை கவரவில்லை.
அவர் முதலில் 1936ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தில் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்து அதன் பின்புதான் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்தார் இவ்வாறு நடித்து வந்த எம்ஜிஆருக்கு புரட்சித்தலைவர் என்ற பட்டத்தையும் ரசிகர்கள் கொடுத்துவிட்டார்கள்.
தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக வைத்திருந்த எம்ஜிஆர் உடனே கட்சியில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது இவரைப் போலவே சூரி முதல் அஜித் வரை பலரும் தமிழ் சினிமாவில் கிடைத்த சிறிய கதாபாத்திரங்கள் மூலம் தான் ரசிகர்களிடையே புகழ் பெற்று விளங்கினார்கள்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பல திரைப்படங்களை தனது நடிப்பு திறமையை காட்டி ரசிகர்களை கவர்ந்தவர் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் இருந்தாலும் இந்த சதி லீலாவதி திரைப்படத்தின் மூலம் எப்படியாவது சினிமாவில் நுழைய வேண்டும் என்பதற்காக இந்த திரைப்படத்தில் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்திருப்பார் அதற்கான புகைப்படம் கூட தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தில் எம்ஜிஆர் பார்ப்பதற்கு இளம் வயதில் இருக்கிறார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.