ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு நடிக்க ஓகே சொன்ன எம்ஜிஆர்.! அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட்

MGR

MGR : மக்கள் மனதில் நீங்க இடத்தைப் பிடித்தவர் எம்ஜிஆர் இவர் இளம் வயதிலேயே வறுமையும் பல கஷ்டங்களையும் சந்தித்தார் பின் படிப்படியாக போராடி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் அதன் பிறகு இவருடைய வாழ்க்கை உச்சத்தை தொட்டது. தொடர்ந்து ஹீரோவாக பல வெற்றி படங்களை கொடுத்த எம்ஜிஆர் ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சராக அரியணை ஏறினார்.

அதன் பிறகு மக்கள்களுக்கு பல உதவிகள் செய்து இன்றுவரையிலும் நீங்க இடத்தை பிடித்திருக்கிறார். எம்ஜிஆர் இன்று நம்முடன் இல்லை என்றாலும் அவரை பற்றி, படத்தை பற்றி இன்றும் நாம் பார்த்து பேசி  கொண்டாடி வருகிறோம் குறிப்பாக 50, 60களில் பல வெற்றி படங்களை கொடுத்து சிவாஜிக்கு நிகராக வலம் வந்தார்.ர் எம்ஜிஆர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும்  அவதாரம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட எம்ஜிஆரை வைத்து படம் பண்ண பல தயாரிப்பு நிறுவனங்கள் வரிசை கட்டின. அந்த வகையில் நடிகர் சிவாஜியை வைத்து கர்ணன், பலே பாண்டியா, கப்பலோட்டிய தமிழின பல திரைப்படங்களை இயக்கியவர் பி ஆர் பந்துலு. இவர் சிவாஜி வைத்த இயக்கிய ஒரு சில படங்கள் சரியாக ஓடாததால் எம்ஜிஆரிடம் சென்று பேசி அவரை வைத்து ஒரு படம் பண்ண முயற்சி செய்தார்.

பி ஆர் பந்துலுவை பார்த்த எம்ஜிஆர் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று பேசினார். பி ஆர் பந்துலு தனது ஆசையை சொல்லவும் கண்டிப்பாக நடிகிறேன் என்று  சொன்னார் கதையை பற்றி பி ஆர் பந்துலு பேச துவங்க கதை இருக்கட்டும்.. எவ்வளவு அட்வான்ஸ் கொடுப்பீங்க என சிரித்துக் கொண்டே கேட்க இயக்குனர் பதறிவிட்டார்.

ஏனெனில் அவர் பணம் எதையும் எடுத்து செல்லவில்லை அப்பொழுது பி ஆர் பந்துலுவுடன் சென்றிருந்த வசனகர்த்தா ஆர் கே சண்முகம் உடனே வெளியே போய் பி ஆர் பந்துலுவின் கார் ஓட்டுனரிடம் ஒரு ரூபாய் வாங்கி வந்து பி ஆர் பந்துலுவிடம் கொடுக்க எம்ஜிஆர் வாங்கிக்கொண்டார் அப்படியே உருவான படம் தான் ஆயிரத்தில் ஒருவன் இந்த படம் வெளிவந்து பல லட்சங்களை வசூலித்தது.

AAYIRATHIL ORUVAN
AAYIRATHIL ORUVAN