உலகநாயகன் கமலஹாசன் திரை உலகில் போடாத கெட்டப்பே இல்லை நடிக்காத கதாபாத்திரங்களை கிடையாது எல்லாவற்றிலும் புகுந்து விளையாண்டு வெற்றியை கண்டுள்ளார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் கூட விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பெற்று வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது.
கமலின் விக்ரம் திரைப்படம் ஒட்டுமொத்தமாக 410 கோடிக்கு மேல் அள்ளி அசத்தியது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து உலகநாயகனுக்கு வாய்ப்புகள் ஏராளமாக குவிந்துள்ளது முதலாவதாக இந்தியன் 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடிப்பு வருகிறார் அதனை தொடர்ந்து உலகநாயகன் தேவர்மகன் 2, சபாஷ் நாயுடு போன்ற படங்களில் நடிப்பார் என தெரிய வருகிறது.
இதனால் உலகநாயகனின் மார்க்கெட் அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாமல் தனது சம்பளத்தையும் அதிகரித்துள்ளார். இப்போ ஒரு படத்துக்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகிய வண்ணமே இருக்கிறது இது மட்டுமல்லாமல் சின்ன திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார்.
இப்படி ஓடிக்கொண்டிருக்கும் கமலஹாசன் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. உலக நாயகன் கமலஹாசன் திரை உலகில் இருக்கும் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு எப்பொழுதுமே மரியாதை கொடுக்க கூடியவர் குறிப்பாக சிவாஜி, எம்ஜிஆர் போன்றவர்களுக்கு ரொம்ப மரியாதை கொடுத்தார் அவர்களுக்கும் கமலஹாசனை ரொம்பவும் பிடிக்கும்..
கமலஹாசன் சிவாஜி, எம் ஜி ஆர் ஐ பற்றி பல மேடைகளில் புகழ்ந்து பேசி இருக்கிறார் இப்படி நாம் பல விஷயங்களை பார்த்து இருக்கிறோம். ஆனால் எம்ஜிஆர் கமலஹாசனை அழைத்து அவருக்கு சால்வை போர்த்து பரிசு கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவருக்கு முத்தமும் கொடுத்துள்ளார் அந்த அரிய வீடியோ இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய வீடியோவை..
Such a beautiful vintage video
❤️😍Tamilnadu State awards given by Ex Chief minister late #MGR to #KamalHaasan
Look at the way #MGR kisses #Andavar on his forehead and Ulaganayagan in turn falling on ponnmanna semmal's feet#Epic pic.twitter.com/YS0C9Fdy0m
— Nammavar (@nammavar11) October 27, 2022