தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. இவர் இதுவரை 168 படங்களில் நடித்துள்ளார் இப்பொழுது தனது 169 திரைப்படமான ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எம்ஜிஆர் உடன் பயணித்த நினைவுகள் பற்றி பேசியுள்ளார்.
நான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர்.. நான் சென்னை வந்த போது புரட்சித்தலைவர் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு எல்லாம் பார்த்து அவர் எப்படி நடப்பாரு அவருடைய சாதனைகள் எல்லாம் பார்த்து ஆப் கிரீன்ல வாழ்க்கையில அவருடைய பெரிய ரசிகனாகிட்டேன்.. அவரோட பெரிய வெறியனாகவும் ஆயிட்டேன்.
அவருடைய சாதனைகள் பெரிய ஆக்சன் ஹீரோவாக இருந்தார் அலிபாபா, மலைக்கள்ளன் வரும்பொழுது 50 ன்னு நினைக்கிறேன்.. சிவாஜி சார் அவர்களுடைய என்ட்ரி பராசக்தி ஒரே ஷோவில் நடிப்புன்னா என்னங்கறதையே மாத்திட்டாங்க.. வசன உச்சரிப்பு என்னங்கறதையே மாத்திட்டாங்க.. இதான் நடிப்பு இதுதான் வசன உச்சரிப்பு அப்படின்னு சொல்லி ஒரு புரட்சியை உண்டாக்கினவர் நடிகர் திலகம்..
அந்த காலகட்டத்தில் வந்து பெரிய பெரிய ப்ரொடியூசர், டைரக்டர் எல்லாம் சிவாஜி சார் பின்னாடி போனாங்க.. எம்ஜிஆர் சார் கதை முடிஞ்சு போச்சுன்னு நினைச்சாங்க அவ்வளவுதான் அப்படின்னு சொன்னாங்க.. அப்ப வந்து எம்ஜிஆர் சார் ஒரு படத்தை சொந்தமாக தயாரித்து இயக்கினார்.. அப்போ இவருக்கு தேவையான்னு நினைச்சாங்க அந்த படம் தான் நாடோடி மன்னன் இதிகாசம் படைத்தது.
டைரக்டர் எல்லாம் நடுங்கிட்டாங்க நான் யாருன்னு நிரூபிச்சாரு நீங்க யாரும் வரலைனாலும் பரவாயில்லை நானே படம் எடுத்து நானே டைரக்ட் பண்ணி நானே பாத்துக்கிறேன். அப்படி வந்து அவரு செட்டுக்குள்ள வந்தாரு டைரக்டர் எல்லாம் வியர்க்கும்.. அந்த மாதிரியான சாதனையை படைத்து காட்டியவர் சிவாஜி இணையாக யாராலும் நடிக்கவே முடியாதுன்னு..
இருந்த காலகட்டத்தில் ராஜ் பூர் மாதிரி பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் சிவாஜி மாதிரி ஒரு கட்டத்தில் கூட நடிக்க முடியாது அவ்வளவு பெரிய நடிகர்ன்னு சான்று கொடுத்த காலகட்டத்தில் அவருக்கு போட்டியா எம்ஜிஆர் சார் நடிச்சு அவரை விட பெரிய மார்க்கெட் சம்பாதித்து அவரைவிட நிறைய பணம் சம்பாதிச்சு அவரை விட மிகப்பெரிய படங்களை கொடுத்து சாதனை பண்ணி நின்னாரு இல்ல அது எம் ஜி ராமச்சந்திரன்..
சினிமாவுல அவர் செஞ்ச சாதனை அரசியல் யாரு அவரு போட்டி.. மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் அவர்கள் அவரை மாதிரி ஒரு எழுத்தாளர் இந்தியாவிலேயே கிடையாது அவர் மாதிரி ஒரு பேச்சாளர் இந்தியாவிலே கிடையாது அவர் மாதிரி ஒரு அரசியல் வாதி இந்தியாவில் கிடையாது. அவரே ஒரு ராஜதந்திரி இந்தியாவிலேயே கிடையாது. 13 ஆண்டுகள் கோட்டைக்குள்ளேயே அமர்ந்து முதலமைச்சர் சேர் பக்கமே திரும்பி பார்க்காத மாதிரி வைச்சவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் அது என்ன சாதாரணமான சாதனையா 13 ஆண்டுகள் சாமானிய மக்களுக்கு கரண்ட் இல்லாத கிராமங்களுக்கு கரண்ட் கொடுத்தாங்க..
ஒவ்வொரு குடிசை வீட்டுக்கும் விளக்கு ஃப்ரீயா கொடுத்தாங்க பாஸ் வசதி செஞ்சாங்க ரோடு போட்டாங்க மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தாங்க பல சாதனைகளை செய்து கொண்டே இருந்தார்கள். 1978ல் எனக்கு நர்வஸ் பிரேக்டவுன். இந்த சமயத்தில் என் உடல் தேறியதும் என்னை வந்து தி நகர் ஆபீஸ்ல பார்க்க சொன்னாங்க அப்போ எம்ஜிஆர் இந்த பாரு..
நடிகனுக்கு உடம்பு தான் மூலதனம் ஸ்டண்ட் எல்லாம் ரீஸ்க் எடுக்காதே அதுக்கு தனி ஆளுங்க இருக்காங்கன்னு சொன்னாங்க அதுக்கு அப்புறம் கல்யாணம் எப்ப பண்ணுகிறது என்று கேட்டாங்க இல்ல இன்னும் பொண்ணு பார்க்கல முதல்ல கல்யாணம் பண்ணிக்கங்க நல்ல ஒரு குடும்ப பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ முதல்ல பொண்ணு பார்த்தா என்கிட்ட தான் சொல்லணும் நான் கல்யாணத்துக்கு வரேன் அப்படின்னு சொன்னாங்க அதுக்கப்புறம் மனைவி லதாவ ரெண்டு மூணு மாசத்துல பார்த்தேன்..
நான் எங்க அண்ணன் கிட்ட கூட சொல்லல எம் ஜி ஆர் கிட்ட தான் சொன்னேன் ரொம்ப சந்தோஷப்பட்டாரு நான் கல்யாணத்துக்கு வரேன்னு அதுக்கப்புறம் அஞ்சு ஆறு மாசம் லதா வீட்டில கொஞ்சம் ஒத்துக்கொள்ள எம்ஜிஆர் என்கிட்ட கேட்டுக்கும் போது பொண்ணு வீட்ல கொஞ்சம் ஒதுக்குறாங்க தயங்கறாங்க..
அதான் லேட் ஆகுதுன்னு சொன்னேன் அதுக்கப்புறம் இரண்டாவது நாளு ஒத்துக்கிட்டாங்க எம்ஜிஆர் சார் ஒய் ஜிபி சார்கிட்ட போன் பண்ணி ஏன் தயங்குறீங்க நல்ல பையன் கொஞ்சம் கோபக்காரான் உங்க பொண்ண குடுங்க நல்லா வச்சுப்பான்னு சொல்லி இருக்காங்க நான் இப்ப வாழ்வில் சந்தோஷமாக இருக்கேனா அதுக்கு காரணமே பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்கள் தான் என கூறினார்.