70,80 காலகட்டங்களில் திரை உலகை ஆட்சி செய்த அவர்கள் வெகு சிலரே ஆனால் அவர்களை அசைத்து கூட பார்க்கமுடியாமல் இருந்த காலம் அது அதில் முக்கியமானவராக பார்க்கபட்டவர் நடிகர் எம்ஜிஆர்.
இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் அப்போதைய காலகட்டத்தில் மக்களின் நாயகனாகவே பார்க்கப்பட்டார். சினிமாவையும் தாண்டி அரசியலில் களம் புகுந்து தனது பணிகளை செவ்வனே செய்து காட்டி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதிலும் குடிபெயர்ந்தார் எம்ஜிஆர்.
இப்படி சினிமாவிலும், நிஜத்திலும் கொடிகட்டி பறந்த எம்ஜிஆருக்கு மிகச்சிறந்த நண்பனாகவும், சினிமாவில் வில்லனாகவும் வலம் வந்தார் நம்பியார். வில்லனுக்கு பெயர்போன நடிகர்களில் முதன்மையானவராக பார்க்கப்படுபவர் நம்பியார். கட்டுக்கோப்பான உடல் அமைப்பு, கம்பீரமான குரல் வளம் ஆகியவை நம்பியாரை சினிமாவின் உச்சிக்கே சென்றது.
எம்ஜிஆரும், நம்பியாரும் சினிமாவில் நடிக்கும் பொழுது அவர்களது சினிமா பயணம் நிஜத்தில் சண்டை போட்டுக் கொள்வது போல இருக்கும் அந்த அளவிற்கு இரண்டு பேரும் தத்ரூபமாக நடித்து அசத்துவார்கள். இவர்கள் இருவரும் இணையும் திரைப்படம் வேற லெவல் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.
எம்ஜிஆர் இருந்தால் அந்தப் படத்தில் வில்லனாக நம்பியார் இருப்பது காலம் காலமாக இருந்தது. அப்படித்தான் நாமும் பல படங்களில் எம்ஜிஆருக்கு வில்லனாக நம்பியார் நடித்திருப்பார் பார்த்து இருக்கிறோம் நமக்கு தெரியும் ஆனால் ஒரு படத்தில் நம்பியாருக்கு வில்லனாக எம்ஜிஆர் நடித்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா எந்த படம் என்று தெரிந்தால் நீங்களே ஷாக் ஆகி விடுவீர்கள்.
எம்ஜிஆர் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் “தனிப்பிறவி” இந்த திரைப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா, நம்பியார் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ஹீரோ எம்ஜிஆர் நடித்திருப்பார் நம்பியாரின் மகளாக ஜெயலலிதா நடித்த இருப்பார்.
இந்த படத்தில் நம்பியாருக்கு வில்லனாக எம்ஜிஆர் பின்னி பெடல் எடுத்து இருப்பார். இந்த படத்தில் மட்டும்தான் நம்பியார் ஹீரோவாகவும், எம்ஜிஆர் வில்லனாகவும் நடித்த படம். இது இப்பொழுது இருக்கும் காலகட்ட ரசிகர்கள் பலரும் தெரியாது.