மக்கள் திலகம் எம்ஜிஆர் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அதன்னுடைய மதிப்பு இப்போ பல லட்சம்

M-G-R
M-G-R

திரை உலகில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பின் தனது திறமையை வளர்த்துக் கொண்டு ஜொலிக்கின்றனர். அதேபோலவே தான் இவர்களுடைய சம்பளமும் முதலில் 500, 1000 என வாங்கி இருப்பார்கள் படிப்படியாக சினிமாவில் முன்னேறி  தற்பொழுது கோடிக்கணக்கில் நடிகர்கள் சம்பளம் வாங்குகின்றனர்.

அதன்படி தமிழ் சினிமாவில் 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் ஏராளம்.. இப்படி இருக்கின்ற நிலையில் நடிப்பிற்கு பெயர் போன எம்ஜிஆர் திரை உலகில்  பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென  கோடான கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தினார் காலப்போக்கில் சினிமாவில் இருந்து விலகி அரசியலிலும் ஈடுபட்டு வெற்றி கண்டார். தொடர்ந்து பல தடவை முதலமைச்சராகவே பயணித்த எம்ஜிஆர் திடீரென உடல்நல குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.

இவருடைய இறப்புக்குப் பிறகும் இவரைப் பற்றி இவரது படத்தைப் பற்றி இன்றளவும் பெரிய அளவில் பேசி வருகின்றனர் அந்த அளவிற்கு சினிமா உலகில் கொடி கட்டி பறந்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் இப்படிப்பட்ட எம்ஜிஆர் முதன் முதலில் நடித்த படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

1936 ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதலில்  சதிலீலாவதி திரைப்படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படம் தான் அவருக்கு முதல் திரைப்படம் கூட இந்த படத்தில் நடிக்க எம்ஜிஆர் அப்பொழுது சுமார் 100 ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர் என சொல்லப்படுகிறது இந்த படத்திற்கு பிறகும்  இன்ஸ்பெக்டர் வாய்ப்புதான் அவருக்கு வந்தது.

இப்படி சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த எம்ஜிஆர் எப்பொழுது அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்தது. தொடர்ந்து நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து பின் ஹீரோ என்ற இமேஜ் பெற்றார் அதன் பிறகு எம்ஜிஆருக்கு  லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.