தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மக்களும் மிக எளிதாக மறக்க முடியாத வகையில் வாழ்ந்த சென்றவர் எம்ஜிஆர் இவரை புரட்சித்தலைவர், மக்கள் திலகம், பொன்மன செம்மல், கொடுத்து கொடுத்து சிவந்த கைகள், என பல புகழுக்கு பெயர் போனவர். அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி செல்வாக்கு மிகுந்த நபராய் திகழ்ந்து வந்தவர். துள்ளி குதித்து ஆடும் நடனம் கால் சண்டை உதட்டை கடித்துக் கொண்டு வசனம் பேசுவது என தனக்கென சினிமாவில் தனி பாணியை உருவாக்கி அதில் ஜம்ப்வானாக திகழ்ந்தவர்.
மேலும் தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர் அரசியலில் களம் இறங்கிய பிறகும் சினிமாவில் நடித்து வந்தார் எம்ஜிஆர், அதேபோல் எம்ஜிஆர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது அந்த வகையில் 60களில் வெளியான எம்ஜிஆர் திரைப்படம் 1200 கோடி வசூல் வேட்டை நடத்தியது அது எந்த திரைப்படம் என்று தற்பொழுது காணலாம்.
சினிமாவில் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு உலகம் எங்கும் திரையிடப்படும் திரைப்படங்கள் கோடிகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது அதேபோல் சமீப காலமாக தமிழ் சினிமாவில் கோடிகளில் வசூல் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது அதிலும் பாண் இந்தியா திரைப்படங்கள் என்றால் நிச்ச ஆயிரம் கோடிககு மேல் வசூல் செய்துவிடும்.
ஆனால் 60களில் கோடிகளில் ஒரு திரைப்படம் வசூல் செய்துள்ளது என்றால் அதனை யாராலும் நம்ப முடியாது எம்ஜிஆர் ஜெயலலிதா அசோகன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் அடிமைப்பெண் இந்த திரைப்படம் 1969 ஆம் ஆண்டு வெளியாகியது இந்த திரைப்படம் வெளியாகி 1200 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தி உள்ளது. 60 70 காலகட்டத்தில் எம்ஜிஆர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது அப்பொழுதைய வசூல் மன்னன் எம்ஜிஆர் என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
அப்படிதான் எம்ஜிஆர் நடிப்பில் வெளியேறிய அடிமைப்பெண் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது திரையரங்குகளில் 175 நாட்களுக்கு மேல் ஓடி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த இந்த திரைப்படம் வெறும் 50 லட்சம் பட்ஜெட்டில் உருவானது ஆனால் இந்த திரைப்படம் மொத்தம் 2 கோடி 50 லட்சம் வரை வசூல் செய்ததாம் ஆனால் இன்றைய வசூல் மதிப்பில் கணக்கிட்டால் 1200 கோடி வசூல் இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த இந்த திரைப்படத்திற்கு நிறைய சிறப்புகள் உண்டு அந்த வகையில் கேவி மகாதேவன் இசையில் உருவான இந்த திரைப்படத்தின் பாடல் மாபெரும் வெற்றி, மேலும் நிலவே பாடலை பாடியதன் மூலம் இந்த திரைப்படத்தின் மூலம் எஸ்பி பாலசுப்ரமணியம் பாடகராக களமிறங்கினார்.