முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கப் போகும் மெட்டி ஒலி சீரியல் நடிகர்..! அட இவர்தான் டைரக்டரா..!

stalin
stalin

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் போஸ் வெங்கட் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் நடிப்பது மட்டுமின்றி இயக்குனர் மற்றும் அரசியல் போன்ற பல்வேறு செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார் அந்த வகையில் திமுக தலைமை கழக பேச்சாளர் பொறுப்பில் உள்ளவர்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் 2003ஆம் ஆண்டு மீடியாவில் புகுந்து தற்போது வரை வெள்ளித்திரை சின்னத்திரை என பல குணச்சித்திர வேடத்தில் நடித்து கலக்கி வருகிறார் அதிலும் இவர் சன் டிவியில் மெட்டி ஒலி சீரியலில் நடித்த இன்றும் யாராலும் மறக்க முடியாது ஏனெனில் அந்த சீரியல் இவருக்கு பெயரையும் புகழையும் உண்டாக்கி கொடுத்து விட்டது.

அதன்பிறகு போஸ் வெங்கட் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அவதாரம் எடுத்தார். அந்த வகையில் எந்த திரைப்படமானது சென்னையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் பொழுது போஸ் வெங்கட் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படம் இயக்கப்பட்டது.

மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க போஸ் வெங்கட் வீட்டின் பக்கத்து வீட்டில் நடந்த உண்மை சம்பவம் ஆகும் இந்த திரைப்படத்தின் மூலமாக ஸ்ரீராம் மற்றும் காயத்ரி ஆகிய இருவரும் கதாநாயகர்களாக அறிமுகமாகி இருந்தார்கள். இந்த திரைப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ் கஜராஜ் police’s விஷ்ணு ராமசாமி போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை ஹாஷிர் அவர்கள் தயாரித்திருந்தார்.

மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் ரோபோ சங்கர் அவர்கள் மூன்று காலு வாகனம் என்ற பாடலை பாடியிருப்பார்.  இந்நிலையில் இயக்குனர் போஸ் வெங்கட் அவர்கள் தன்னுடைய அடுத்த திரைப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

boss vengat-1
boss vengat-1

அந்தவகையில் இவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்றை ஒரு திரைப்படமாக எடுக்க உள்ளாராம் அதுமட்டுமில்லாமல் தேர்தலை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப் போவதாகவும் அவர் எப்படி தலைவனாக அவதாரம் எடுத்தார் என்பதையும் தெளிவாக இந்த திரைப்படத்தில் காட்டப் போவதாக கூறியுள்ளார்.

மேலும் மு க ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க அவருடைய ஒப்புதல் வாங்குவதற்காக படக்குழுவினர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது மேலும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசை அமைக்கப் போவதாகவும் சமுத்திரக்கனியும் முக்கிய வேடத்தில் நடிக்கப் போவதாகவும் சில விஷயங்கள் வெளிவந்துள்ளது.

boss vengat-2
boss vengat-2