vijayakanth : தமிழ் சினிமாவில் வாரி வாரி கொடுக்கும் கொடை வள்ளல் என்றால் அது எம்ஜிஆர் தான் இதனை பல பேர் பேட்டியில் கூறி நாம் கேட்டுள்ளோம். அதற்குப் பிறகு இன்று வரை சினிமாவை தாண்டி பொதுமக்களிடமும் கொடை வள்ளலாக வாழ்ந்து வருபவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் பற்றி பேசாத நடிகர்களே கிடையாது இல்லை என்று வருபவர்களுக்கு வாரி வாரி கொடுக்கும் வள்ளல்.
இவரை சினிமாவில் அனைவரும் கேப்டன் என்று தான் அழைப்பார்கள்.. பொதுவாக ஒருவர் இருக்கும் பொழுது அவரின் புகழ் யாருக்குமே தெரியாது. அவர் இல்லாவிட்டால் அவரின் புகழ் அனைவருக்கும் தெரியும் ஆனால் இவர் இருக்கும் பொழுது இவரின் புகழ் பல நடிகர்களுக்கு தெரிந்தது. இப்படி உன்னதமான உள்ளம் கொண்ட வரை கடவுள் இந்த நிலைமையில் வைத்துள்ளது கொடுமையான விஷயம்தான்.
விஜயகாந்தை சுற்றி இருப்பவர்கள் விஜயகாந்த் உடன் பயணிப்பவர்கள் அவருடன் இருந்த அனைவரும் அவரால் உதவி பெற்றவர்கள் தான். அவருடன் இருந்த யாரும் உதவி பெறாமல் இருக்கவே முடியாது விஜயகாந்தை இன்னும் பல மக்கள் தன் குடும்பத்தில் ஒருத்தவராகவும் தெய்வமாகவும் பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் மீசை ராஜேந்திரன் ஒரு முறை விஜயகாந்த் கொடை உள்ளம் பற்றிய ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். நடிகர் சங்க கட்டிடம் முடிந்ததும் விஜயகாந்த்திற்க்கு ஒரு விழா எடுத்து பெருமைப்படுத்த வேண்டும் என நடிகர் விஷால் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என மீசை ராஜேந்திரன் உணர்ச்சி பொங்க பேசினார். பல நடிகர்களின் கண்ணீரை துடைத்தவர் விஜயகாந்த்.
அந்த வகையில் பாடகியும் நடிகையுமான தேனி குஞ்சரம்மாள் இறந்த பொழுது இறுதி சடங்கு செய்வதற்கு கூட காசு இல்லாமல் அவர்கள் குடும்பத்தினர் தவிர்த்து வந்தார்கள். அப்பொழுது குஞ்சரம்மாள் குடும்பத்தினர் விஜயகாந்தை வந்து சந்தித்தார்கள் உடனே கேப்டன் என்னை அழைத்து குஞ்சரம்மாள் இறந்துவிட்டார் அதனால் யாருக்கும் தெரியாமல் குஞ்சரம்மாள் மகளிடம் நான் கொடுத்ததாக கூறிஇந்த 10000 ஆயிரத்தை கொடுத்துவிட்டு வந்துவிடு என என்னை அனுப்பி வைத்தார் என மீசை ராஜேந்திரன் கூறினார்.
நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா.. வாடா போடா என பேசியதற்கு ஜோவிகாவை விலாசி விஷ்ணு
இப்படி பலருக்கும் தன்னால் முடிந்த அளவு உதவிகளை செய்து வந்தவர் கேப்டன் விஜயகாந்த் அதனால் கேப்டன் விஜயகாந்த் பெயரை தான் நடிகர் சங்க கட்டடத்திற்கு வைக்க வேண்டும் என மீசை ராஜேந்திரன் கூறினார் அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்க கட்டிடம் இருக்கும் இடத்தை மீட்டதே விஜயகாந்த் தான் என உண்மையை பகிரங்கமாக மீசை ராஜேந்திரன் மேடையில் கூறினார்.