mersal movie latest update: தமிழ் சினிமாவில் அட்லி இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் மெர்சல். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளிவந்து தியேட்டரில் வெளிவந்து சரவெடியாக வெடித்தது. மேலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி விட்டது.
இந்த திரைப்படம் தமிழ் திரை உலகில் சுமார் 250 கோடிக்கு மேலாக வசூல் செய்து சாதனை படைத்தனர். அப்படி இருந்தாலும் இந்த திரைப்படத்தில் பல தவறுகள் இருந்துள்ளதை கண்டுபிடித்து ரசிகர்களும் நெட்டிசன்களும் நமது இயக்குனர் அட்லியை சரமாரியாக திட்டித் தீர்த்து வருகிறார்கள்.
அப்பொழுது விமான நிலையத்தில் ஒரு பெண் உடல்நலக் குறைவின் காரணமாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பார் அப்பொழுது அவர் கையில் இருந்த காபி கப் தூரத்தில் கிடைக்கும் ஆனால் விஜய் அருகில் வந்தவுடன் அதுவே கையின் அருகில் இருக்கும் இதுவே மிகப் பெரிய தவறு.
இதை தொடர்ந்து விருது விழாவின் பொழுது வில்லனுடன் விஜய் பேசிக்கொண்டே இருக்கும்போது வில்லன் தன்னுடைய கோட்டில் காலரை வெளிப்புறமாக போட்டிருப்பார் அதனையே அடுத்த ஒரு காட்சியில் அவருடைய காலர் மாறியிருக்கும்.
அதேபோல ஒரு மாணவி லாரியில் அடி படுவார் அப்பொழுது அவருடைய முகம் முழுவதும் காயம் ஏற்பட்டு இருப்பது மட்டுமல்லாமல் லாரி இணைத்தவுடன் அவருடைய கையில் இருக்கும் பணம் அனைத்தும் படர்ந்து இருக்கும் ஆனால் அவர் கீழே கிடக்கும் போது அவர் கையில் பணம் இருக்கும் அது மட்டுமல்லாமல் அவருடைய முகத்தில் காயம் இருக்காது.
மேலும் விஜய் போலீஸ்காரர்கள் விசாரிக்கும் போது அவருடைய அருகில் இருக்கும் மார்க்கர் அடுத்த காட்சியில் பார்த்தால் மறைந்திருக்கும்.
அதேபோல் விஜய் வில்லனை அடிக்கும் பொழுது எஸ் ஜே சூர்யா டேபிளின் மேல் விழுவார் அப்பொழுது அந்த டேபிளில் எந்த ஒரு புத்தகங்களும் இருக்காது. அதுவே அவர் விழுந்தவுடன் அந்த இடத்தில் பத்திரம் போன்ற ஒரு மிகப் பெரிய பைல் இருக்கும்.