ஆண்களை அப்படி திட்டுவது கிடையாது, பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை..? கண்ணீருடன் அறந்தாங்கி நிஷா..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் நடைபெற்றுவருகிறது இவ்வாறு அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல்வேறு போட்டியாளர்களும் தற்போது மிகப் பிரபலமாக வலம் வருவது மட்டுமில்லாமல் திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு கூட வளர்ந்து விட்டார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் நடிகை அறந்தாங்கி நிஷா  என்பவர் நீயா நானா என்ற ஷோவில் சமீபத்தில் பங்கேற்று இருந்தார் அப்போது அதில் அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டது மட்டுமில்லாமல் அவர் கூறிய ஒரு விஷயம் அவரை மட்டுமின்றி  மேடையில் அமர்ந்திருந்த பல ரசிகர் பெருமக்களையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

இந்நிலையில் நீயா நானா ஷோ பெண் பிரபலங்கள் மற்றும் அவர்களுடைய கணவர்கள் இடையே உள்ள சம்பவங்களை தான் இந்த நிகழ்ச்சியில்  கேட்கப்பட்டது. அந்தவகையில் அறந்தாங்கி நிஷா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதன் மனரீதியாக பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளார் என அவருடைய கணவர் கூறியிருந்தார்.

அந்த வகையில் அவரிடம் ஏதேனும் ஒரு கேள்வி கேட்டால் போதும் அதற்கு பதில் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு மேலாக ஆகிவிடுகிறது அந்த அளவிற்கு அவருடைய மனநிலை பாதிக்கப்பட்டு விட்டது. இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செய்து அவரை மறுபடியும் பழைய நிலைமைக்கு கொண்டு வர எனக்கு முப்பது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.

மேலும் இது குறித்து பேசிய நிஷா என்னை உலகத்தில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளையும் சொல்லி திட்டி உள்ளார்கள் இனி என்னை திட்ட வேண்டுமென்றால்  புதிதாக வார்த்தைகள் கண்டுபிடிக்க வேண்டும் என்று நிஷா கூறினார்.

nisha-1

அதுமட்டுமில்லாமல் பொதுவாக ஒரு ஆண்களை திட்ட வேண்டும் என்றால் அவர்களுடைய  உடல் பற்றி  திட்டுவது கிடையாது ஆனால் பெண்களை திட்டும் பொழுது உடலை குறிப்பிட்ட தான் திட்டுகிறார்கள் என நிஷா கண்ணீருடன் பேசியது ரசிகர்களை கண்கலங்க செய்துவிட்டது.