அஜீத், கமல், ரஜினி, சூர்யா, வரலெட்சுமி, எடப்பாடி, தமிழிசை என அனைவரையும் வைத்து கொரோனா விழிப்புணர்வு காமெடி வீடியோவை வெளியிட்ட நெட்டிசன்கள்!! இதோ அந்த வீடியோ!

Actress Varalakshmi sarathkumar and other actors corona awarness video : கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பரவி வருவதால் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரசை கட்டுபடுத்த எந்த ஒரு தடுப்பு ஊசியும் கண்டுபிடிக்கவில்லை. இதனை கட்டுபடுத்த மக்கள் சமூக விலகளை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த போலீஸ்காரர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த அனைவரும் தொடர்ச்சியாக பணிபுரிந்து கொண்டிருந்தார்.இதனால் மக்கள் தங்களது பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.இந்நிலையில் நடிகர், நடிகைகள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். திரைபிரபலங்கள் சமூகவலைதளத்தில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

144 தடை உத்தரவை மக்கள் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டுமென்று நடிகர்-நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அவ்வப்போது கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டு கொண்டிருந்தனர். இப்போது அந்த வீடியோக்கள் அனைத்தையும் நெட்டிசன்கள் ஒன்றுசேர்த்து காமெடி வீடியோவாக மாற்றியுள்ளனர்.

அந்த வீடியோவை பார்த்த நடிகை வரலட்சுமி சரத்குமார் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவை பார்த்து சிரிப்பை அடக்க இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இப்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் காட்டு தீ போல பரவி கொண்டு வருகிறது.

இதோ அந்த வீடியோ.