தனது அப்பா மறைந்துவிட்டார் என்று தெரியாமல் பிரபல நடிகரின் புகைப்படத்தை தட்டி தட்டி விளையாடும் செல்ல குழந்தை.! கண்கலங்க வைக்கும் தருணம்

தற்பொழுது கொரோனா நோய் எந்த அளவிற்கு உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வருகிறதோ அதே அளவிற்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இளம் வயதினர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் திடீரென்று உயிர் விடுவது பரவலாக காணப்படுகிறது.

அந்த வகையில் உடல்நலம் கொஞ்சம் சரியில்லை என்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு எதிர்பாராதவிதமாக உயிரிழந்தவர் தான் நடிகர் சிரஞ்சீவி.  தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்தார் கடந்த வருடம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இவருடைய மரணம் குடும்பத்தினர்கள்,  திரைப் பிரபலங்கள் என்று அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.  இவர் உயிர் இறந்த போது இவரின் மனைவி நடிகை மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார்.  மேக்னா ராஜ் மற்றும் சிரஞ்சீவி பல வருடங்களாக காதலித்து பிறகு திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்நிலையில் சிரஞ்சீவி இறப்பிற்குப் பிறகு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தற்பொழுது அந்த குழந்தைக்கு ஒரு வயதாகும் .அந்த குழந்தையின் புகைப்படங்களை மேகனா ராஜ் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வந்தார்.

இந்நிலையில் தற்பொழுது மேக்னா ராஜ் தனது குழந்தையை அவரின் அப்பா ஃபோட்டோ முன் வைத்து அந்த குழந்தை விளையாடும் அழகிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோவை பார்க்க சந்தோஷமாக இருந்தாலும் ஒரு புறம் சிரஞ்சீவி இல்லை என்பது கஷ்டமாகத் தான் இருக்கிறது.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.